தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

டீச்சரை கடத்திய வணக்கம் சோமுவின் நண்பர்கள் வாக்குமூலம்? திகீல்?

advertisement by google

advertisement by google

ஆம்பிளையா இருந்தா, இந்த சோமுவை என் முகத்தை பார்த்து பேச சொல்லுங்கள் பார்ப்போம்ன்னு டீச்சர் சொன்னதுமே எங்களுக்கு பயமாயிடுச்சு” என்று டீச்சரை கடத்திய வணக்கம் சோமு விவகாரத்தில் அவரது நண்பர்கள் 2 பேர் வாக்குமூலம் தந்துள்ளனர்.

advertisement by google

திருச்சியில் மகாலட்சுமி என்ற டீச்சரை கடத்த முயன்ற வணக்கம் சோமு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், வணக்கம் சோமுவுக்கு வெளிநாட்டு நண்பர்கள் 2 பேர் உதவியது தெரியவந்தது. ஒருவர் பெயர் அலெக்ஸ் 36, தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இன்னொருவர் பெயர் மரியபிரகாஷ், 36. இவரும் தஞ்சையை சேர்ந்தவர். மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார்.டீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. 2 நண்பர்களை தூக்கியது போலீஸ்!கடத்தல்இவர்கள் 2 பேருமே டீச்சரை கடத்தியபோது அந்த ஆம்புலன்ஸில் இருந்தவர்கள். ஆனால் பாதி வழியில் இறங்கி கொண்டார்களாம். எங்கெங்கோ சுற்றிதிரிந்துவிட்டு, அவரவரர் வெளிநாடு செல்ல, திருச்சி ஏர்போர்டுக்கு கிளம்ப தயாராகும்போது, 2 பேரையுமே சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துவிட்டனர்.வாக்குமூலம்அப்போது இவர்கள் போலீசில் சொன்னதாவது: “வணக்கம் சோமுவுக்கு நாங்கள் காலேஜ் பிரண்ட்ஸ்.. நாங்க வெளிநாட்டில் இருந்தாலும் ஃபேஸ்புக் மூலம் எங்களுக்குள் தொடர்பு இருந்து கொண்டே இருந்தது. ஒருநாள் தான் ஒரு பெண்ணை லவ் பண்ணுவதாகவும், அந்த பெண்ணைதான் கல்யாணம் செய்துக்க போறேன், அதனால எனக்கு ஹெல்ப் வேணும், நீங்க 2 பேரும் உடனே கிளம்பி வாங்க’ன்னு சொன்னான்.ஆம்புலன்ஸ்அது மட்டுமில்லை, நாங்க கிளம்பி வர்றதுக்கான ஃபிளைட் டிக்கெட்டையும் சோமுதான் புக் பண்ணி தந்தான். அதன்படி, 29-ந் தேதி திருச்சி வந்து சேர்ந்தோம். மறுநாள் 30-ந் தேதி, அந்த பெண் இந்த வழியாகதான் வருவாள், நாம இந்த வேனில் ஏற்றி கொண்டு போகலாம் என்று சோமு சொன்னான்.தாலி கட்ட முயற்சிஅதன்படியே டீச்சரும், ஆண்டாள் வீதி வழியாக வந்தார். அப்போது அவரை ஆம்புலன்ஸில் வலுக்கட்டாயமாக ஏற்றினோம். ஆம்புலன்ஸில் போனபோதுதான், சோமு அந்த பெண்ணை விருப்பமே இல்லாமல் தாலி கட்ட முயற்சிக்கிறான் என்பது எங்களுக்கு தெரிந்தது. இதை பற்றி அந்த பெண்ணிடமே நாங்கள் கேட்டோம். அதற்கு அவர், “ஆம்பிளையா இருந்தா, இந்த சோமுவை என் முகத்தை பார்த்து பேச சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.பயந்துட்டோம்இந்த வார்த்தையை டீச்சர் சொன்னதும் எங்களுக்கு பயம் வந்துடுச்சு. உடனே நாங்க, “ஏன்டா, சோமு இப்படியெல்லாம் செய்றே” என்று கேட்டோம். அப்பதான் துவரங்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வந்தத கொண்டிருந்தது. போலீஸ் வருவதை தெரிந்து அங்கேயே டீச்சரை சோமு இறக்கிவிட்டுவிட்டான். நாங்க ரெண்டு பேரையும் மதுரையில் இறங்கி கொண்டோம்” என்றனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள சோமு, டிரைவர் விக்கி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button