இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நித்தியானந்தாவின் சிஷ்யைகள் 2பேர் கைது?

advertisement by google

advertisement by google

??தங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் சிஷ்யைகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

advertisement by google

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக பெங்களூரூவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

advertisement by google

தனக்கு 19 மற்றும் 15 வயதுகளில் மகள்களும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்

advertisement by google

இவர்களை பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார் ஜனார்த்தன ஷர்மா. குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஜனார்த்தன் சென்று அழைத்துபோது, 3 பிள்ளைகளும் வீட்டுக்கு வர மறுத்ததாகவும், ஆசிரமத்தில் இருந்தவர்கள் இவரை விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் உள்ள ஹிராபூரில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது

advertisement by google

தனது குழந்தைகளை அழைத்துவரச் சென்ற ஷர்மாவை, ஆசிரம நிர்வாகிகள் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் கடந்த 2ம் தேதி அவர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த ஷர்மாவின் 15 வயது மகளையும், 13 மகனையும் மீட்டனர்

advertisement by google

குழந்தைகளை கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளதாக அகமதாபாத் விவேகானந்தா நகர் காவல் நிலையத்தில் ஜனார்த்தன ஷர்மா புகார் மனு அளித்தார். இதையடுத்து நித்யானந்தா மற்றும் அவரது உதவியாளர்கள் பிரியாதத்வா, பிரான்ப்ரியா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி. ஆச்சாரி கூறியுள்ளார்.இந்த நிலையில் ஜனார்த்தன ஷர்மாவின் புகாரை அடுத்து நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே, நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த ப்ராண்ப்ரியா, பிரியதத்துவா என்ற இரண்டு பெண் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சாமியார் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது குறித்து விசாரித்து வருவதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

Related Articles

Back to top button