இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

டாஸ்மாக் திறக்க யார் கேட்டார்கள்?தமிழகரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு?முழுவிவரம் – வின்மீன்நியூஸ்

advertisement by google

டாஸ்மாக் திறக்க யார் கேட்டார்கள்? அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.

advertisement by google

சென்னை: தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

advertisement by google

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, நாடு தழுவிய அளவில் லாக்டவுன், நடைமுறை அமல் படுத்தப்பட்டது. அப்போது முதல் சுமார் இரண்டு மாதங்களாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அண்டை மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திரா போன்றவற்றில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இங்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று மாலை அரசு வெளியிட்ட உத்தரவில், மே 2ம் தேதி முதல், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பாலகிருஷ்ணன் அளித்த ஒரு பேட்டியில், கொரோனா பாதிப்புள்ள சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது ஆபத்தானது. அங்கு கூட்டம் சேர விடாமல் யாரால் கட்டுப்படுத்த முடியும். மேலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது யார்?

advertisement by google

எத்தனையோ கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளாலும், மக்களாலும் வைக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் போராட்டமம் அறிவித்துள்ளன. அதை எல்லாம் நிறைவேற்றாத, அரசு, மதுபான கடைகளை மட்டும் திறப்பதில் அவசரம் காட்டியது தவறானது.
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்.. நிர்வாகங்கள் செய்த 3 பெரும் தவறு.. சரி செய்ய ஒரு சான்ஸ் இருக்கு
வைரஸ் பாதிப்பு குறைவடைந்தால் அதை ஒரு காரணமாக சொல்ல முடியும். ஆனால் தமிழகத்தில், பாதிப்பு, அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மதுபான கடைகளை திறப்பது என்பது ஆபத்தானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், தமிழகத்தில் 40 நாட்களாக மதுவை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சூழ்நிலையை அரசு குலைக்க வேண்டாம். தமிழ் இனம் உயர்வதற்கான ஒளிக்கீற்று தென்படுகிறது. மது அரக்கன் மக்களின் வருங்காலத்தை சீர் குலைக்க, அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button