தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவிபட்டியில் போலிபட்டா வழங்கியவர்கள் மீது நடவடிக்கையெடுக்க கோரி ஐந்தாம் தூண் அமைப்பு போராட்டம்?

advertisement by google

போலி பட்டா வழங்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

advertisement by google

ஐந்தாம் தூண் அமைப்பு நிறுவனர் அ.சங்கரலிங்கம் தலைமையில் கட்டாலங்குளம் கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், கயத்தாறு வட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் சில நபர்களுக்கு பட்டா வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த போலி பட்டா கடந்த 2005-ம் ஆண்டு வழங்கியதாக கிராம கணக்குகளில் பதிவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பட்டாக்கள் 2015-ம் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் ஏக்கர் கணக்கில் கணக்கில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. அவை உண்மையானவையா அல்லது போலியா என்பது தெரியவில்லை.

advertisement by google

எனவே, 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கட்டாலங்குளம் கிராமத்தில் கொடுக்கப்பட்ட நத்தம் புறம்போக்கு பட்டாக்களை ஆய்வு செய்து, முறைகேடு இருப்பின் ரத்து செய்ய வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது சட்டப்படியான குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கு தொடுக்க வேண்டும். இதில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button