இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சரத்குமார் செல்போனில் இருந்து சரத்குமாருக்கே போன் வந்த |சம்பவத்தினால், பதறி போன சரத்குமார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

இதென்னடா சரத்குமாருக்கு வந்த சோதனை…..

advertisement by google

சரத்குமார் செல்போனில் இருந்து சரத்குமாருக்கே போன் வந்ததாம்..

advertisement by google

இந்த சம்பவத்தினால் சரத்குமாரே பதறி போய்விட்டார்!

advertisement by google

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் வீடு, திருவான்மியூர் கொட்டிவாக்கத்தில் உள்ளது..

advertisement by google

இங்குதான் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

advertisement by google

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், விஐபிக்களுக்கு சரத்குமார் போன் செய்துள்ளார்..

advertisement by google

சரத்குமார் ஏன் நமக்கு போன் செய்ய வேண்டும் என்று அனைவருமே குழம்பி விட்டனர்..

தொடர்ந்து சரத்குமாரிடம் போன்கள் வரவும், இதை பற்றி சரத்குமாரிடமே கேட்டு விட்டனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சரத்குமார், “நான் போன் பண்ணலையே” என்று சொல்லியிருக்கிறார்..

மேலும் தன் குரலில் இப்படி தலைவர்களிடம் செல்போனில் பேசி கொண்டிருப்பது பேசுவது யாராக இருக்கும் என்ற கேள்வியும் சந்தேகமும் சரத்குமாருக்கு எழுந்தது.

அப்போதுதான், அந்த மர்மநபர் சரத்குமாருக்கே போன் செய்துள்ளார்..

இதனால் உஷாராகிவிட்ட சரத்குமார், நைஸாக அந்த மர்ம நபரிடம் பேச்சு தந்தார்..

தன்னை யாரென்னும் காட்டி கொள்ளவில்லை.. அப்போதுதான் அந்த மர்ம நபர் கோவையை சேர்ந்தவர் என்பதும், பெயர் அசோக், ஒரு சாப்ட்வேட் என்ஜினீயர் என்பதும் தெரியவந்தது.

சாப்ட்வேர் உதவியுடன் இப்படி தலைவர்களின் குரலைப் போல் எல்லாரிடமும் பேசி வந்து கொண்டிருப்பதையும் சரத்குமார் கண்டுபிடித்தார்..

விஷயத்தை அவரிடம் கறந்தபிறகுதான், தன்னை சரத்குமார் என்றே அந்த நபரிடம் சொன்னார்..

அப்போது, டென்ஷனில் எகிறிவிட்டார் சரத்குமார்.. “என் குரலில் நீங்க எப்படி பேசலாம்” என்று கண்டித்தார்..

கன்னியாகுமரி குழித்துறை அண்ணாசிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு

இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்… “என்னுடைய செல்போன் நம்பரை போலியாக உருவாக்கி, அந்த நம்பர் மூலம் பிறருக்கு போன் செய்து மோசடி செய்த கோவையை சேர்ந்த அசோக் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.. சரத்குமார் போலவே வேறு பிரபலங்கள் குரலிலும் அந்த நபர் பேசினாரா, அப்படி பேசி பண மோசடி ஏதாவது செய்தாரா என்றும் மற்றொரு புறம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, அந்த நபர் பேசும்போது கோவையை சேர்ந்தவர் என்று சொன்னாலும், பேச்சில் மலையாள வாடை அடித்ததாம்.. அதனால் கேரளாவை சேர்ந்தவராக இருக்குமோ என்று சரத்குமாருக்கு டவுட் வந்துள்ளது..

இதையடத்து, அந்த கோணத்திலும் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.மேலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில், “இனிமேல் யாருக்காவது முக்கிய தலைவர்கள், முக்கிய விருந்தினர்களின் பெயரில் செல்போனுக்கு வரும் அழைப்புகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அதன் உண்மைத் தன்மையை அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்… இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button