இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

தமிழகத்திற்காக ஜெர்மனி அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி

advertisement by google

தமிழகத்திற்காக ஜெர்மனி அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி!

advertisement by google

கடந்த சில மாதங்களாகவே தமிழகம் மீது பிரதமர் மோடி அதிக அக்கறை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழின் பெருமை குறித்து ஐநாவில் பேசுவது, சீன அதிபரை தமிழகத்திற்கு அழைத்து வருவது உள்பட பல விஷயங்களை செய்து வரும் பிரதமர் மோடி இந்தியாவிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அவர்களிடம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருவாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஜெர்மனி அதிபரும் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பதால் விரைவில் தமிழகத்தில் ஜெர்மனி நிறுவனங்கள் முதலீடு செய்யும் என தெரிகிறது

advertisement by google

முன்னதாக இந்தியா – ஜெர்மனி இடையேயான தொழில் முதலீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

advertisement by google

இந்த ஆலோசனைக்குப்பின், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சமீபகாலமாக, இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பாராட்டு தெரிவித்த ஏஞ்சலா மெர்கல், முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், மேக் இன் இந்தியா திட்டத்தை தான் வரவேற்பதாகவும், இந்த திட்டத்தில் ஜெர்மனியும் பங்கு பெறும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

advertisement by google

மேலும் மோடி, மெர்கல் ஆகிய இரு தலைவர்கள் முன்னிலையில், கல்வி, உயர் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட 11 முக்கிய ஒப்பந்தங்கள், இந்தியா – ஜெர்மனி இடையே, கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button