இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

வெள்ளக்காடானது சென்னை: வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்✍️சாலைகளில் வெள்ளப்பெருக்கு✍️நிவர் புயலால் விடிய விடிய விடாமல் மழை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

நிவர் புயலால் விடிய விடிய விடாமல் பெய்கிறது கனமழையால் வெள்ளக்காடானது சென்னை: வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்: சாலைகளில் வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதி வீடுகளில் புகுந்த மழைநீர்

advertisement by google

சென்னை: சென்னையில் 3வது நாளாக விடிய விடிய விடாமல் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடானது. சென்னையை புரட்டி போட்ட நிவர் புயலால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர். சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் தேங்கும் நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர்.  நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.  குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி சாலைகளே தெரியாத அளவுக்கு மூழ்கிவிட்டது. எல்லா பக்கமும் தண்ணீர் தேங்கி வருவதால் சென்னையே மிதக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

advertisement by google

நேற்று புயல் கரையை கடந்ததால் விடாமல் கனமழை பெய்தது. இதனால் வெள்ளக்காடாகி 2வது நாளாக சென்னை மிதக்கிறது. தேங்கிய மழைநீர் வெளியே செல்ல முடியாததால் பல இடங்களில் குளம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி விட்டது.  புயல் தமிழகத்தை நெருங்கி வரும் போது  சூறைக்காற்றுடன் கூடிய தீவிர கனமழை சென்னையில் பெய்தது.
இதனால் சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மழை பெய்தது. ஏராளமான தெருக்களில் முட்டியளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அவசர வேலையாக மக்கள் வெளியில் வர நினைத்தால் கூட வர முடியாத நிலை ஏற்பட்டது. தி.நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் மழை இரவு முழுக்க வெளுத்தெடுத்தது.  இந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

advertisement by google

குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, பல்லாவரம், வடபழனி  உள்ளிட்ட சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளை மழை புரட்டி எடுத்தது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. சில பகுதிகளில் மழைநீர் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் உயரத்துக்கு புகுந்துவிட்டது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள்  பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் வாகனங்கள் எல்லாம் நீரில் மூழ்கும்  நிலை உருவாகியது. எனவே தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் மூலம்  உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  பொதுமக்களின் குமுறலாக உள்ளது.  வேளச்சேரி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் மழைநீர் வடிய வழி இல்லாததால் சென்னை மற்றும் புறநகரில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்களும் விழுந்துள்ளது. முக்கிய சாலையில் 26க்கும் அதிகமான மரங்கள் விழுந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது.

advertisement by google

ராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் 3 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அசோக் நகர் 11வது அவென்யூவில் சுமார் 40 அடி மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தொடர் மழையால் தாழ்வான இடங்களில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கி வருகிறது. நேற்று புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. மரங்கள் எப்போது விழும் என்று சொல்ல முடியாது என்பதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு வித பீதியுடனே சென்றனர்.

advertisement by google

சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் 50 வயது நபர் பலி
நிவர் புயல் சூறைக்காற்றால் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் நடந்து சென்ற 50 வயது நபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘நிவர்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக்காற்றுடன் கன மழை  பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அந்த வகையில் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பள்ளி அருகே நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது திடீரென பயங்கர வேகத்தில் மழையுடன் சூறைக்காற்று வீசியது.

advertisement by google

இதில் மரம் முறிந்து சாலையில் நடந்து ெசன்ற 50 வயது நபர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது ேநரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து ஐஸ் அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்….

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button