இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – எஸ்.பி ஜெயக்குமார் தகவல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – எஸ்.பி ஜெயக்குமார் தகவல்

advertisement by google

✍தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது வருகிறது, இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு பாதுகாப்பு பணிகளை எஸ்.பி ஜெயகுமார் பார்வையிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பில், அவசியமின்றி வெளியில் சென்றவர்களை நிறுத்தி அவர்களுக்கு கபசுர குடிநீர், முக கவசங்களை வழங்கி கொரொனா குறித்து விழிப்புணர்வு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார்.

advertisement by google

பின்னர் எஸ்.பி ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில், 200 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் இதுவரை 8040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பயன்படுத்தப்பட்ட 6 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

✍மாவட்டத்தில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக தனிப்படைகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில் மட்டும் 20 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தேவையின்றி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவீடுகள் வெளியிடுவது தெரிந்தால் அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

advertisement by google

தொடர்ந்து பேசிய அவர்,

advertisement by google

✍சாத்தான்குளத்தில் மார்டீன் என்ற ரவுடி மீது 8 குற்ற வழக்குகள் உள்ளது. இவர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வியாபாரிகளை மிரட்டி வருகிறார். கடந்த 23ஆம் தேதி ஒரு வியாபாரியை, கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்வேன் என்று மிரட்டிய ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வியாபாரி கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் மார்டீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், அதற்கு முன்னதாக அவர், ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு சென்றபோது டாக்டர்களிடம் எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால், அன்றே அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 28ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

advertisement by google

✍பொட்டல்காடு கிராமத்தில் எரிவாயு குழாய் பதிப்பது சம்பந்தமாக கிராம மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போரட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இருப்பதால் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் அவர்கள் ஒன்று கூடிவிடக்கூடாது என்பதற்காக 200 போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டத்தை கைவிடப்பட்டது, அதனால் போலீசாரும் வாபஸ் பெறப்பட்டனர்.

✍ஆய்வின் போது தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர்கள் அருள், பிரேமா, ஸ்டாலின், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் ரவிகுமார், லதா ஆகியோர் உடன் இருந்தனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button