பயனுள்ள தகவல்மருத்துவம்

காமராஜர் பதவியில் இருந்த நேரம்? சீனா ,இந்தியா இடையே போர் மூண்டது? இந்தியா படு தோல்வி? நேரு மிக வருத்தத்துடன் இருந்தார்?அந்நேரம் காமராசரை சந்திக்கும் வாய்ப்பில் காமராசர் கூறியது என்ன?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கர்மவீரர் காமராசர்….

advertisement by google

காமராஜர் பதவியில் இருந்த நேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா படு தோல்வி. நேரு மிக வருத்தத்துடன் இருந்தார். அந்நேரம் காமராசரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து. காமராஜரிடம் புலம்பித் தீர்த்து விட்டார். உடனே காமராஜர்

advertisement by google

” இப்ப என்ன பிரச்னைங்கறேன் ??? “

advertisement by google

அதற்கு நேரு ” நம்ம கிட்ட போதுமான நவீன ஆயுதங்கள் இல்லாததினால் தான் இந்தத் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்ப்பட்டது. நவீன ஆயுதங்கள் இருந்திருந்தால் நாம் ஜெயித்து இருக்கலாம்” என்றார்.

advertisement by google

அதற்கு காமராஜர் ” மத்த வேலையை நிறுத்தி விட்டு அந்த அமெரிக்காகாரன் கிட்ட நமக்குத் தேவையானதை வாங்குங்கறேன்”

advertisement by google

வாங்கலாம் தான் ஆனால்…..என்று இழுத்தார் நேரு….

advertisement by google

இன்னும் என்ன பிரச்சனை ????

advertisement by google

இல்ல !!!! அந்த வெப்பன்ஸ் இந்தியாவுக்கு அனுப்பணும்னா அமெரிக்காவில ஏதாவது ஒரு பாங்க் நமக்கு பண உத்திரவாதம் எழுதிக் குடுக்கணும். ஆனா இந்தியாவை நம்பி எந்த பாங்கும் உத்திரவாதம் தர மாட்டேன்ங்கிறான்…” என்று வருத்தத்துடன் சொன்னார் நேரு…..

உடனே காமராஜர் அவருடைய பாஷையில்

” அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்”

நேருவுக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜர் மீண்டும் கேட்டார்

” அட அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்”

நேரு புரிந்து கொண்டு உடனே

“இருக்கு…. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ன்னு ஒரு பாங்க் இங்க இயங்கிட்டு இருக்கு”

உடனே காமராஜர் “அதை உடனே இழுத்து மூடச் சொல்லுங்கறேன்”

நேரு திகைத்தார்… “அய்யோ அதை மூடச் சொன்னால் சர்வதேச பிரச்சனை ஆகுமே”

உடனே காமராஜர் ” அட என்னமோ ஆகட்டும். நமக்கு உதவாத அவன் கடை இங்க எதுக்குங்கறேன்???”

உடனே நேரு எதையும் யோசிக்காமல் அந்த bank க்கு உடனடியாக ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தார்

“எங்களுக்கு உதவி செய்யாத உங்கள் நாட்டு எந்தத் தொழிலும் இனி எங்கள் நாட்டில் வேண்டியதில்லை… உடனே இடத்தைக் காலி செய்யவும்”

வங்கி அதிகாரி திகைத்தார்… உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பினர். அடுத்த சில மணித் துளிகளில் அமெரிக்க வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு உத்திரவாதம் தரத் தயார் ஆயினர்…

நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இது போல் பல idea க்கள் தானாகவே மனதில் தோன்றும்.

பேச்சாளர் திரு சுகி சிவம் உரையில் இருந்து…

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button