இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அசுரவளர்ச்சியால் டாப் கியர் போட்டு.. வேற லெவலில் மேலே போகும் உதயநிதிஸ்டாலின்?முழுவிவரம் ..விண்மீன்நியூஸ்

advertisement by google

டாப் கியர் போட்டு.. வேற லெவலில் மேலே போகும் உதயநிதி..

advertisement by google

அசுர வளர்ச்சி..

advertisement by google

நாளுக்கு நாள் உதயநிதியின் வளர்ச்சி வேற லெவலில் போய் கொண்டிருக்கிறாம்..

advertisement by google

கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது.. ஆனால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்டுவிட்டது.

advertisement by google

உதயநிதி பொறுப்பை ஏற்று கொண்டதில் இருந்தே இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது..

advertisement by google

வேலை செய்யாதவர்கள் களையெடுக்கப்பட்டு வருகிறார்கள்..

advertisement by google

உதயநிதிக்கு பொறுப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதே கட்சியின் சில மாவட்ட செயலாளர்களும், மூத்த தலைவர்களும்தான் என்று சொல்லப்பட்டது..

advertisement by google

ஆனால், இபபோது திடீரென சில சீனியர்களே எரிச்சல் அடைந்துள்ளனராம். அதற்கு காரணம், உதயநிதியின் அதிரடிகள்தான். இந்த அதிரடி கருணாநிதியிடம் இருந்ததில்லை.. எல்லாரையுமே அனுசரித்தார்.. யாரையும் தடாலடியாக நீக்கியதில்லை.. சமரசம் செய்வார்.. ஸ்டாலினே புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினாலும் கருணாநிதி கட்சிக்காக உழைத்தவர்களை கைவிடவே இல்லை..

ஒருகட்டத்தில் கிட்டத்தட்ட கருணாநிதி போலவேதான் ஸ்டாலினும் அனுசரணையை கடைப்பிடித்தார். முக்கியமானவர்களுக்கான முக்கியத்துவத்தையும் தர ஆரம்பித்தார்.. இப்போதும் அப்படித்தான் உள்ளது.

ஆனால், இப்போதெல்லாம் ஸ்டாலினை மிஞ்சி உதயநிதி சில முடிவுகளை எடுப்பதாகவும், அந்த முடிவுகளுக்கு ஸ்டாலின் உடன்படுவதாகவும் சொல்லப்படுகிறது

அதுமட்டுமல்ல.. உதயநிதிக்கு நெருக்கமான அன்பில் மகேஷ் போன்றோர், இளைஞர் அணியை பலம் வாய்ந்த திமுகவின் முக்கிய அணியாக மாற்றி வருகிறார்கள்..

இளைஞர் அணி நிர்வாகிகளையும் நிர்வாகிகளாக மாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.. இதுதான் சீனியர்களுக்கு கடுப்பை தந்து வருகிறதாம்..

பெரும்பாலும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது.. இதனால் ஆரம்ப காலத்தில் இருந்து கட்சிக்காக இருந்தவர்கள் அதிருப்தியில் உள்ளனராம்..

இளைஞர் அணியின் செயல்பாடுகளை தாண்டி அவரின் கவனம் இருப்பதாக சொல்கிறார்கள்..

யாரையும் கலந்தாய்வு செய்யாமல் அவராகவே கருத்து சொல்வது, மாவட்ட செயலாளர்களை தனியே அழைத்து பேசுவது. துரைமுருகன், எவ வேலு, கேஎன் நேரு, திருச்சி சிவா போன்ற சீனியர்களை மதிக்கவில்லை என்றும் பேச்சு எழுந்து வருகிறது.

அதேசமயம், உதயநிதியை பாராட்டும் தரப்பும் இருக்கிறது.. இப்படிப்பட்ட உத்வேகம் நிறைந்தவர்தான் தேவை என்கிறார்கள்.. யாராக இருந்தாலும்சரி, எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, உதயநிதி டக் டக்கென பதிலளித்து ட்வீட் போடுகிறார்..

சில சமயம் இவரது கிண்டல் நிறைந்த பதிவுகள் மக்களை ரசிக்கவும் வைக்கின்றன.. இப்படி ஒரு வேகம்தான் இன்றைய தலைமுறைக்கு தேவை என்கிறது இன்னொரு தரப்பு..

ஆக மொத்தம் விஸ்வரூபமெடுத்து வருகிறார் உதயநிதி!

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button