இந்தியா

கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் இனிமேல் எண்கவுன்டர்தான் தெலுங்கானா கால்நடைஅமைச்சர் ஸ்ரீநிவாஸ் சர்ச்சைபேச்சு?

advertisement by google

advertisement by google

கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் இனிமேல் என்கவுன்டர் தான் என தெலுங்கானா மாநில கால்நடைத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது

advertisement by google

தெலுங்கானாவில், ஷ்சாபாத் சுங்கச்சாவடி அருகே, கால்நடை பெண் டாக்டரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள்,

advertisement by google

விசாரணையின் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர்.

advertisement by google

இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதில் 4 பேர் பலியானார்கள்

advertisement by google

இது தொடர்பாக, பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன

advertisement by google

இந்நிலையில், தெலுங்கானா மாநில கால்நடைத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இது ஒரு பாடம். இனி நீங்கள் யாரேனும், தவறு செய்தால், நீதிமன்ற விசாரணை காரணமாக சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்க முடியாது. சிறை செல்லவும் பின் பிணையில் வெளியில் வந்து வழக்கை இழுத்தடிக்கவும் முடியாது.அது போன்று இனி எதுவும் நடக்காது. இந்த என்கவுன்டர் மூலம் கொடூர குற்றங்களில் ஈடுபட்டால், என்கவுன்டர் தான் என்ற எச்சரிக்கை கருத்தை நாங்கள் அனுப்பியுள்ளோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெலுங்கானா அரசாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை,இது, வெறும் நலத்திட்டங்கள் மூலம், மட்டும் நாங்கள் முன்மாதிரியாக நிற்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில், ஏற்படுத்தியுள்ள இத்தகைய நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர், தனது கருத்து தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button