தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஓபிஎஸ் படம் வீரபாண்டிதொகுதி MLA மனோன்மணி சிவக்குமார் இல்ல திருமணவிழாவில் இடம்பெறாதது அதிமுகவில் சர்ச்சை?

advertisement by google

advertisement by google

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி சிவக்குமார் இல்லத் திருமண விழா அழைப்பிதழில் ஓ.பி.எஸ்.படம் இடம்பெறாதது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியை பொறுத்தவரை அவர் தான் முடிவெடுக்கக்கூடிய தலைமை இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கட்சி புரோட்டகால் படி அதிமுக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் தவறாமல் இடம்பெறுவது வழக்கம்.ஆனால் சேலம் வீரபாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.மனோன்மணி சிவக்குமார், தனது இல்லத்திருமண விழா அழைப்பிதழில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் படத்தை தவிர்த்துள்ளார். இது அதிமுகவில் விவாதப் பொருளாக உள்ளது. ஏற்கனவே ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என குண்டை வீசியிருந்தார். பிட் அடிப்பதை தடுக்கலாம்யா… அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து இந்நிலையில், இந்த அழைப்பிதழ் விவகாரமும் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நமக்கு இந்த அழைப்பிதழ் தொடர்பான படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய அதிமுகவை சேர்ந்த அந்த நிர்வாகியிடமே இது குறித்து பேசினோம், என்ன தான் எம்.எல்.ஏ. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஓ.பி.எஸ்.அண்ணன் படத்தையும் போட்டு இருக்கனும்.ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஒற்றுமையாக இணைந்து செயலாற்றி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இருவருக்கும் இடையே மனகசப்பை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் தன்னை போன்ற கட்சி விசுவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button