t

விடுதலையில் தாமதம் ஒரே விஷம் குடித்த 20கைதிகள் பரபரப்பு

advertisement by google

விடுதலையில் தாமதம்.. ஒரே நேரத்தில் விஷம் குடித்த 20 கைதிகள்.. திருச்சி சிறையில் திடீர் பரபரப்பு.

advertisement by google

திருச்சி: 20 கைதிகளும் ஒரே நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டார்கள்.. இதனால் திருச்சி ஜெயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

advertisement by google

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இந்த முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 37 பேர், வங்கதேசம் 30 பேர், சீனா 1, பல்கேரியா 1, ரஷ்யா 1, தென்னாப்பிரிக்கா 1, ஜெர்மன் 1 என மொத்தம் 72 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

இவர்கள் அனைவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களின் தண்டனை காலம் முடிந்ததால் தங்களையும் விடுவிக்க கோரி அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். ஆனால் சில பிரச்சினைகளால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

advertisement by google

இந்த 72 பேரில் 46 பேர் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி, நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்ட விரோதமாக தங்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வலியுறுத்தியும் இவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

advertisement by google

பெண் போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்.. ஷாக் வீடியோ வெளியானது
இவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. சாப்பாடு தந்தும் அதை யாரும் சாப்பிடவில்லை. விடிய விடிய உண்ணாவிரதம் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. எப்போதுமே தமிழர்கள்தான் ஜெயிலுக்குள் உண்ணாவிரதம், போராட்டம் என்று இறங்குவார்கள். ஆனால், இப்போது, பிற வெளிநாட்டினரும் போராட்டத்தில் குதித்து விட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, இதில், 20 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 20 பேரும் விஷத்தை குடித்துவிட்டனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொருத்தராக வாந்தி எடுக்க துவங்கினர். இதையடுத்து, உடனடியாக அனைவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ள இந்த கைதிகளுக்கு விஷம் எப்படி கிடைத்தது, எந்த விஷத்தை சாப்பிட்டார்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button