இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அமமுக வை கட்சியாக பதிவுசெய்ய அதிமுக கடும் எதிர்ப்பு

advertisement by google

விண்மீன் விரைவு செய்திகள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்ய அதிமுக கடும் எதிர்ப்பு!

advertisement by google

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்யக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்து அதிமுக தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதாகவும், டிடிவி கட்சியின் பெயரில் “அம்மா” என்ற வார்த்தை உபயோகிக்கப்படுவதால் அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு முருகவேல், சசிகலாவும், தினகரனும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றார். இதனால் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும், கட்சியில் அம்மா என்ற வார்த்தையையும் பயன்படுத்த தார்மீக உரிமை டிடிவி தினகரன் தரப்புக்கு கிடையாது என அதிமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button