இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஜோலார்பேட்டையில் வங்கி கெடுபிடியால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் மயங்கி விழுந்து இறப்பு✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

ஜோலார்பேட்டையில் வங்கி கெடுபிடியால் மன உளைச்சலுக்கு ஆளான ெபண் மயங்கி விழுந்து இறந்தார்.

advertisement by google

ஜோலார்பேட்டையில் உள்ள வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவஞானம் (வயது 62), ஓய்வுபெற்ற ெரயில்வே ஊழியர். இவருக்கு அனிதா (52) என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களின் இளைய மகள் பொறியியல் கல்லூரியில் படிக்க ஜோலார்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் 2011-ம் ஆண்டு கல்விக்கடன் பெற்றார்.

advertisement by google

படிப்பு முடிந்ததும் மகள் வேலை வாய்ப்பின்றி வீட்டிலேயே இருந்து வருகிறார். 2 வருடங்களாக வங்கியில் பெற்ற கல்விக் கடனை திருப்பி செலுத்துமாறு, வங்கி அதிகாரிகள் கெடுபிடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அனிதா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, உயர் ரத்த அழுத்தத்தால் மயக்கமடைந்து கீழே விழுந்து திடீரென இறந்தார்.

advertisement by google

இதுகுறித்து சிவஞானம் கூறியதாவது:-

advertisement by google

நான் வீட்டில் இல்லாதபோது, வங்கி மேலாளர், வங்கி ஏஜென்டுகள் எனது வீட்டுக்கு வந்து, மகள் பெயரில் வாங்கிய கல்விக்கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தகாத வார்த்தைகளால் ேபசி, தபாலை கொடுத்து ைகயெழுத்துப் பெற்றுச் சென்றுள்ளனர். இதனால் எனது மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். எனது மனைவி இறந்ததற்கு வங்கி மேலாளர், ஏஜென்டுகள் தான் காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

advertisement by google

இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google

மனைவியின் சாவு குறித்து சிவஞானம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கும், வேலூர் வங்கியின் மண்டல அலுவலகத்துக்கும் புகார் அளித்துள்ளார்.

advertisement by google

_

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button