இந்தியா

அயோத்தியில் திடீர்144 தடை பதட்டம்

advertisement by google

விண்மீன் விரைவு செய்திகள்.
அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன?

advertisement by google

டெல்லி: சிறப்பு அதிகாரத்தை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை அதிரடி நடவடிக்கை மூலம் முடிவிற்கு கொண்டு வந்த பாஜக அடுத்து அயோத்தி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளது.

advertisement by google

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது . அயோத்தி வழக்கு வரும் அக்டோபர் 17ம் தேதி முடிய உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் தற்போது அங்கு 144 தடையை உத்தரவு போடப்பட்டு உள்ளது. அங்கு போலீஸ், சிஆர்பிஎப் குவிக்கப்பட்டு வருகிறது.
144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்

advertisement by google

காஷ்மீர் எப்படி
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் நீக்கப்படுவதற்கு முன்பும் கூட இதேபோல் நடவடிக்கைகள்தான் எடுக்கப்பட்டது. அப்போதும் ராணுவம் காஷ்மீரில் கொஞ்சம் கொஞ்சமாக குவிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன்பின் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகமாக நீக்கப்பட்டது.

advertisement by google

சபரிமலை வழக்கு
அதே போல் சபரிமலை வழக்கு தீர்ப்பு வெளியான சமயத்தில் சரியாக தீர்ப்பு வெளியாகும் முதல்நாள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் கேரள என்பதால் அங்கு போலீஸ் மட்டுமே அதிக அளவில் குவிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளை தொடர்ந்து தற்போது அயோத்தியில் 144 தடை போடப்பட்டுள்ளது.

advertisement by google

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்த பின் பாஜக ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தில் இறங்கும் என்று கூறுகிறார்கள். அதாவது தீர்ப்பு பெரும்பாலும் இந்து அமைப்புகளுக்கு சாதகமாக வரும் என்று பாஜக கருதுவதாக கூறுகிறார்கள். அதனால், தீர்ப்பு வந்ததும் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நினைக்கிறார்.

advertisement by google

எப்போது தீர்ப்பு
நவம்பர் மாதத்தில் 17ம் தேதிக்கு பிறக்காது இது தொடர்பாக அமித் ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். முக்கியமான காஷ்மீர் பிரச்னையை கூட ராணுவத்தை வைத்து எளிதாக சமாளித்த மத்திய அரசு, ஏற்கனவே கட்டுப்பாட்டில் உள்ள உத்தரபிரதேசத்தில் நிலவும் அயோத்தி பிரச்சனையை இன்னும் எளிதாக தீர்க்க வாய்ப்புள்ளது என்று பாஜகவினர் பேசிக்கொள்கிறார்கள்.

advertisement by google

மோடி
காஷ்மீர் பிரச்சனையை பல நாடுகள் கவனித்து வந்ததை. அதையே பாஜக சமாளித்துவிட்டது. அதனால் உத்தர பிரதேச மாநிலத்திற்கும் நடக்கும் பிரச்சனையை எளிதாக சமாளித்துவிடலாம் என்று பாஜக அரசு நினைக்கிறது. தற்போது அயோத்தியில் சிஆர்பிஎப் போலீசார் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம் எப்படி
இன்னும் சில நாட்களில் அயோத்தியில் ராணுவம் குவிக்கப்பட்ட உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் அயோத்தி வழக்கு விசாரணை முடிய உள்ளது. 1 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதனால் என்ன மாதிரியான பிரச்சனை வேண்டுமானாலும் நடக்கலாம். தீர்ப்பை பொறுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இதுதான் பாதுகாப்பு
தீர்ப்பிற்கு பின் பிரதமர் மோடி அயோத்திக்கு செல்ல இருக்கிறார். அங்கு மக்கள் முன் பேச இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தது. ஆகவே மத்திய பாஜக அரசு பல திட்டங்களை மனதில் வைத்துதான் 144 தடை உத்தரவைய் அமல்படுத்தி உள்ளது. போக போக இன்னும் நிறைய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

advertisement by google

Related Articles

Back to top button