t

பெண்ணின் மூளையில் உயிருடன் நெளிந்த 8 செமீ நீள புழு! மருத்துவர்கள் அதிர்ச்சி!!

advertisement by google

ஆஸ்திரேலியாவில் பெண்ணின் மூளையில் இருந்து 8 செமீ நீளமுள்ள உயிருள்ள புழு எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

ஆஸ்திரேலியாவின் கான்பெரா மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 64 வயதுள்ள பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

advertisement by google

அப்போது அவரது மூளையில் மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் மூளையுடன் ஒட்டியிருந்த ஒரு பொருளை எடுக்க முற்பட்டனர். பின்னர் அது வளைந்து நெளிந்துள்ளது. 8 செமீ அளவில் ஒரு உயிருள்ள சிவப்பு ஒட்டுண்ணி என்பது கண்டறிந்து மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

advertisement by google

பெண்ணிற்கு சிகிச்சையளித்தநரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்ஞ்சய சேனாநாயக்க கூறுகையில், ‘நோயாளி மூன்று மாதங்களாகமறதி மற்றும் மோசமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் எடுத்ததில் அவரது மூளையில் மாற்றங்கள் தெரிந்தது. மூளையில் புற்றுநோய் அல்லது சீழ் இருக்கலாம் என்று எதிர்பார்த்தோம்.

advertisement by google

இதையும் படிக்க |தேர்தல் வருவதற்கு இதுதான் அறிகுறி: ப.சிதம்பரம் விமரிசனம்

advertisement by google

ஆனால் அறுவை சிகிச்சையில் பெண்ணின் மூளையின் முன் பகுதியில் உயிருள்ள ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. இந்த புழுக்கள் மனித மூளையில் இதுவரை கண்டறியப்படவில்லை. சுமார்ஆறு மாதங்களுக்கு பிறகு மூளையில் இருந்து அந்த புழு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் குணமடைந்து வருகிறார்’ என்று தெரிவித்தார்.

advertisement by google

கார்பெட் மலைப்பாம்புகள் இருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் பெண்ணிற்கு பாம்புடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அவர் உட்கொண்ட தாவரங்கள் அல்லது முட்டைகளில் இருந்து இவ்வாறு நடந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button