t

பழங்காலமாக நம் முன்னோர்கள் கண்களுக்கும் ,கண் இமைகளுக்கும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது எப்படி? முடி உதிர்வதை நீக்கி ,வழுப்படுத்துவது எப்படி?

advertisement by google

ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகும். இது கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது. இதில் எதிர்ப்பு அழற்சி அமிலங்கள் நிறைந்து உள்ளது.அடர்த்தியான கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு தீர்வாக அமையும். இயல்பாகவே ஆமணக்கு எண்ணெய் கூந்தல் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆமணக்கு எண்ணெய் அடர்த்தியான கண் இமைகள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபட்டு வருகின்றது. தூய, இயற்கையான மற்றும் குளிர் படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும். நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவிய பின்னர் ஈரம் இல்லாமல் முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். சில துளி ஆமணக்கு எண்ணெயை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூச வேண்டும். ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின் வேர்களை அடைவது முக்கியம். எனவே மிகுந்த கவனத்துடன் துல்லியமாக செய்ய வேண்டும். இது மாதிரி மற்றொரு கண் இமைகளுக்கும் செய்ய வேண்டும்.கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை துடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் செய்யவேண்டும். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும். கண்டிப்பாக தினமும் இரவில் இதனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல கிடைப்பதை காணலாம்.கிளிசரினுடன் முட்டை வெள்ளை கரு இரண்டு துளிகள் கலந்து கண் இமைகளுடன் பூச வேண்டும். இந்த கலவை கண் இமைகளை தடிமானாக , உறுதியாக மற்ற உதவுகிறது. அதே நேரத்தில் முட்டை வெள்ளை கருவில் இருக்கும் அதிகமான புரதம் கண் இமைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button