t

கண்ணதாசனின் 1965ம் வருடம் வந்த படம் திருவிளையாடல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

1965 ம் வருடம் வந்த படம் திருவிளையாடல்.

advertisement by google

அந்தப் பாடல் வந்த சமயத்தில் தமிழகத்தில் நாத்திகப் பிரச்சாரம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த நேரம்.

advertisement by google

அந்த நேரத்தில் இயக்குனர் ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் வந்த படம் தான் திருவிளையாடல்.

advertisement by google

நாத்திக வீச்சு இருந்த அந்த நாட்களிலேயே படம் 250 நாட்களுக்கு மேல் தமிழகமெங்கும் ஓடியது.

advertisement by google

திருவிளையாடல் சிவபெருமானின் சில விளையாட்டுக்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்

advertisement by google

படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள்

advertisement by google

ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனம். கே.வி. மகாதேவன் இசை.

கண்ணதாசன் பாடல்கள் எல்லாமே ரசிகர்களைக் கட்டிப் போட்டது.

பெரும்பாலும் கண்ணதாசன் பாடல்களை அப்போதெல்லாம் வானொலியில் கேட்டாலே, மக்களுக்கு படத்தின் கதை, ஓரளவுக்குப் புரிந்து விடும்.

எண்களை வைத்துக் கொண்டு ஒருவரால் பாட்டு எழுத முடியுமா ?

தமிழ்த் திரையில் எண்களை வைத்துக் கொண்டு பாடல் எழுதிய ஒரே கவிஞர் கண்ணதாசன் தான்.

படத்தில் சிவனும் பார்வதியும் இருக்கும் போது ஒளவை பிராட்டி வருவாள்.

அப்போது பார்வதி ஒளவையிடம் ` ஒளவையே, ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்தி ஈசனைப் பாடு ‘ என்பாள்.

ஒளவை பாடுவாள்

ஒன்றானவன், உருவில் இரண்டானவன்

உருவான செந்தமிழில் மூன்றானவன்

நன்றான வேதத்தில் நான்கானவன்

நமசிவாய என ஐந்தானவன்

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்

இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்

தித்திக்கும் பொருள்களில் எட்டானவன்

தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்

பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்

முற்றாதவன் மூல முதலானவன்

முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகி பெண்ணாகி நின்றானவன்

அவையொன்று தானென்று சொன்னானவன்

தான் பாதி உமை பாதி கொண்டானவன்

காற்றானவன் ஒளியானவன்

நீரானவன் நெருப்பானவன்

நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான

ஊற்றாகி நின்றானவன் அன்பின் ஒளியாகி நின்றானவன்

ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை ஈசனை வரிசைப்படுத்தி விட்டு,

பிறகு ஈசனின் பெருமைகளை இதை விட உயர்த்தி ஒரு கவிஞனால், அதுவும் நிகழ்கால கவிஞனால் முடியுமா ?

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button