இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சுனாமி தாக்கிய15வது நினைவுதினம் தமிழகத்தில் இன்று அனுசரிப்பு?

advertisement by google

♦சுனாமி தாக்கிய 15-வது நினைவுதினம் தமிழகத்தில் இன்று அனுசரிப்பு…

advertisement by google

?தமிழகத்தை சுனாமி தாக்கி இன்றுடன் 15ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,  உயிருக்கு உயிரான, அன்புக்குரிய தங்கள் சொந்தங்களைப் பறிகொடுத்த குடும்பத்தினர் இன்னும் மீளா சோகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

advertisement by google

?கடந்த 2004 இதே நாளில்தான், இந்தோனேஷியா சுமத்ரா தீவில் நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.

advertisement by google

?தாலாட்டுடன் கரையைத் தொட்டுச் சென்ற வங்கக் கடலின் அலைகள் அன்று திடீரென தனது ஆக்ரோஷத்தைக் காட்டின. பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் மக்கள் சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்களை வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்றது.

advertisement by google

?ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

advertisement by google

?உறவினர்கள், நண்பர்கள், உடைமைகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். இதற்கு முன்னர் எந்தவொரு இயற்கை சீற்றமும் ஏற்படுத்திடாத பேரழிவை ஏற்படுத்தியது சுனாமி. பல்லாயிரக்கணக்கான கடலோர மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

advertisement by google

?அரசாங்கமும், பல்வேறு சர்வதேச அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையான நிவாரண உதவிகளை வழங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், உடன் பிறந்தவர்களை இழந்த சகோதர, சகோதரிகள் என பலருக்கும் மனதளவில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்றளவும் மறையவில்லை.

advertisement by google

?சுனாமி தாக்கி 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் மனங்களில் இன்றளவும் அதன் அச்சம் சற்றும் நீங்கவில்லை என்பதே உண்மை…

advertisement by google

Related Articles

Back to top button