இந்தியா

ட்விட்டரில் செந்தமிழன் சீமான் என்ற புதிய கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான்.. ✍️முதல் பதிவில் வலிமையான கருத்து பதிவு செய்து துனைநிற்கும் தமிழ்நாட்டு மாண்புமிகு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என டேக் செய்து பதிவிட்டு… நன்றி தெரிவிப்பு✍️முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?

advertisement by google

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

advertisement by google

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். சீமானுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

advertisement by google

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

advertisement by google

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.…

advertisement by google

— M.K.Stalin (@mkstalin) June 1, 2023

advertisement by google

இவர்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் செந்தமிழன் சீமான் (@NTKSeeman4TN) என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு ஒன்றை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி உள்ளார்.

advertisement by google

கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!@CMOTamilnadu @mkstalin https://t.co/idpthzXIjG pic.twitter.com/2jUHWX51c5

advertisement by google

— செந்தமிழன் சீமான் (@NTKSeeman4TN) June 1, 2023

மேலும் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டு அவரை டேக் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய நா.த.க இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், “பா.ஜ.க-வினரைப் பொறுத்தவரை மாற்றுக் கருத்தையோ, தர்க வாதங்களையோ ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க ஒரு பாசிசப் போக்கைக் கையாளுகிறது என்பது உலகறிந்தது. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வலிமையாகவும் தொடர்ச்சியாகவும் எதிர்ப்பதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பலரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கியிருக்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு, ராமர் கோயில் விவகாரம் உட்பட பா.ஜ.க-வின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும், மத்திய அரசின் நிர்வாக செயல்பாடுகளையும் கடுமையாக எதிர்க்கிறோம். குறிப்பாக மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் உறக்க குரல் கொடுத்ததால்தான் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளின் கணக்குகள் முடக்கப்பட்டதாகப் பார்க்கிறோம். இதில் தி.மு.க புகார் கொடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

நா.த.க-வின் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணனிடம் விளக்கம் கேட்டோம். “சமூக ஊடகங்களின் வாயிலாக இந்தியாவினுடைய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, தங்கள் கருத்துகளைப் பதிவிடுவார்களேயானால் கணக்குகளை முடக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக, இந்திய இறையாண்மைக்குக் கலங்கம் விளைவிக்கக் கூடிய எந்த கருத்துகளைப் பகிர்ந்தாலோ… இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை ஊக்குவித்தாலோ, அவர்களுடைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த ட்விட்டர் நிறுவனத்துக்கு முழு உரிமை இருக்கிறதே ஒழிய… மத்திய அரசாங்கம் இதைச் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், “நா.த.க-வினர் சந்தேகிப்பதுபோல் அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதென்றால், இது கண்டனத்துக்குரிய செயல். மாநில அரசாங்கத்துக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. மத்திய அரசின் அமைப்புகள் ஏதும் ட்விட்டர் நிறுவனத்துக்குப் புகார் தந்ததா என்பதை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். மத்திய அரசாங்கமும் புகார் கொடுக்கவில்லை என அவர்கள் தரப்பில் சொன்னால், எதன் காரணமாக இவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன என்பதை ட்விட்டர் நிறுவனம் விளக்கம் வேண்டும்” என்றார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button