இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இரவுவிரிவாணசெய்திகள்(22.9.2019)

advertisement by google

????விண்மீண்நியூஸ்???பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு

advertisement by google

மேட்டூர்: மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி, நேற்று, மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். தொடர்ந்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து, மரக்கன்று நட வேண்டியதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார். பா.ம.க., மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பசுமை தாயக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

advertisement by google

வடசென்னிமலையில்…: பசுமை தாயகம் சார்பில், ஆத்தூர் அருகே, வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவ, மாணவியருக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், ‘மத்திய, மாநில அரசு, புதிய காலநிலை மாற்ற செயல் திட்டத்தை, அவசர பிரகடனம் செய்ய வேண்டும். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, மரம் நட வேண்டும்’ என, அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை வழங்கினர்.

advertisement by google

Winmeennewsஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: கொழுந்தியாவை கர்ப்பமாக்கிய தொழிலாளி: 2ம் முறையாக போக்சோவில் கைது

advertisement by google

ஓமலூர்: கொழுந்தியாவை கடத்தி கர்ப்பமாக்கிய கட்டட தொழிலாளியை, இரண்டாவது முறையாக, போக்சோவில், போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, தாராபுரத்தைச் சேர்ந்தவர் மணி, 22; கட்டட தொழிலாளியான இவர், இரு ஆண்டுக்கு முன், கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த மாணவியை, ஆசைவார்த்தை கூறி, கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டார். மாணவியின் பெற்றோர் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார், போக்சோ வழக்கில், மணியை கைது செய்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த அவர், மீண்டும், மாணவியுடன் குடும்பம் நடத்தினார். இந்நிலையில், மனைவியின் தங்கையான, பிளஸ் 2 படித்துவந்த, கொழுந்தியா மீது ஆசை ஏற்பட்டு, அவரையும், காதல் வலையில் வீழ்த்தி, 5 மாத கர்ப்பமாக்கினார். இதையடுத்து, மாமனார் வீட்டுக்குச்சென்ற மணி, இரண்டாவது மகளை திருமண செய்துகொள்வதாக கூறிவிட்டு, மாணவியுடன் தலைமறைவானார். பெற்றோர், தீவட்டிப்பட்டி போலீசாரிடம், நேற்று புகாரளித்தனர். மேட்டூரில் தங்கியிருந்த மணியை, போலீசார், இரண்டாவது முறையாக, போக்சோ சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவியை, மருத்துவ பரிசோதனைக்கு பின், சேலத்திலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

advertisement by google

Winmeennewsஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®® 20 ஆண்டுக்கு பின் தூர்வாரிய கிணற்றால் பலன்

advertisement by google

நரசிங்கபுரம்: நரசிங்கபுரத்தில், 20 ஆண்டுக்கு பின், தூர்வாரிய கிணற்றால், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ரயில்வே சுரங்கப்பாதையொட்டியுள்ள பகுதியில், 90 அடி ஆழ, பொதுக்கிணறு உள்ளது. சுற்றுவட்டார பகுதியினர், அதிலுள்ள தண்ணீரை பயன்படுத்தினர். ஆனால், நீரூற்று குறைந்து, காவிரி குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வந்ததால், 20 ஆண்டாக, அத்தண்ணீரை உபயோகப்படுத்தாமல் மக்கள் விட்டதால், கிணறு குப்பைத்தொட்டியாக மாறியது. தற்போது, அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கிணற்றை தூர்வார, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில், 2.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, 20 அடி ஆழம் தூர்வாரப்பட்டது. மேலும், 1.75 லட்சம் ரூபாயில், கிணற்றைச்சுற்றி இரும்பு வேலியுடன், கான்கிரீட் சுவர் கட்டப்பட்டது. தற்போது, அதில் நீரூற்று அதிகரித்ததால், நகராட்சியினர், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் கூறியதாவது: கிணற்றிலிருந்த குப்பை, சேற்றை அகற்றி சுத்தப்படுத்திய நிலையில், தற்போது, 30 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அதை, 12, 14வது வார்டுகளான, கலைஞர் காலனி, திட்டா நகர், புதிய வீட்டு வசதி வாரிய பகுதிகளுக்கு, வினியோகிக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக, ஓரிரு நாளில், மின் மோட்டார் அமைத்து, குழாய் மூலம் வினியோகிக்கும்போது, இரு வார்டுகளின் தண்ணீர் பிரச்னை தீரும். இவ்வாறு அவர் கூறினார்.

Winmeennewsஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®® தாய் நினைவு நாளில் பாச மகன் விபரீதம்

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, கச்சுப்பள்ளி, வண்டிகாரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 24; ஐ.டி.ஐ., முடித்துள்ள இவர், விவசாய கூலி வேலை செய்துவந்தார். இவரது தந்தை சீரங்கன், 52, அண்ணன் குமார், 27, ஆகியோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவரது தாய் பழனியம்மாள், 2016, செப்., 20ல், மாரடைப்பால் இறந்துவிட்டார். தந்தை, சகோதரரை, நந்தகுமார் கவனித்துவந்தார். இந்நிலையில், அவரது தாய் இறந்த, மூன்றாமாண்டு நினைவு நாள், நேற்று வந்தது. இதை நினைத்து வருந்திக்கொண்ட அவர், வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Winmeennewsஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®® சிலையை அகற்றிய வி.ஏ.ஓ.,: ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சங்ககிரி: சுவாமி சிலையை அகற்றிய வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

சங்ககிரி, மோரூர் கிழக்கு ஊராட்சி, புள்ளிபாளையம், போயர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள பொதுக்கிணத்துமேட்டில், வீரமாத்தியம்மன் மண் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். மழைக்காலம் என்பதால், கான்கிரீட் தளம் மீது, சிலையை வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, அப்பகுதி மக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கத்திடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: கடந்த, 5ல், வீரமாத்தியம்மன் கோவில் பண்டிகை முடிந்தவுடன், வி.ஏ.ஓ., குணசேகரன், மக்கள் இல்லாத நேரத்தில், சிலையை அகற்றினார். அதனால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பகுதியில், விநாயகர் கோவில் உள்ளது. அதைச்சுற்றி முள்வேலி அமைத்து, உள்ளே வரக்கூடாது என, ஒரு பிரிவினர் தடுக்கின்றனர். முள்வேலியை அகற்றி, தரிசனம் செய்ய, நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Winmeennews.comஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®® நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைவரும் பாடுபட வேண்டும்

வாழப்பாடி: சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலம், மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தில், வாழப்பாடி, சேஷன்சாவடி, சாரண சாரணியர் இயக்க பயிற்சி மைய வளாகத்தில், மரக்கன்று நடும் விழா, நேற்று நடந்தது. அதில், கலெக்டர் ராமன் தலைமை வகித்து, மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது: புதிய குடியிருப்பு, சாலை விரிவாக்கம், எரிபொருள் தேவை உள்ளிட்ட பயன்பாட்டால் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மழை வளம் பெருக, மரங்கள் அவசியம். அழிக்கப்பட்ட மரங்களை விட, கூடுதலாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனதால், வாழப்பாடியில் பாக்கு, தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. அதனால், மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, அனைவரும் பாடுபடுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட சாரணர் இயக்க செயலர் ஐயந்துரை பங்கேற்றனர்.

Winmeennews.comஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®® மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதையில் நிறுத்தப்பட்ட லாரி, பின்னோக்கி நகர்ந்து, காபி தோட்டத்தில் கவிழ்ந்தது. ஏற்காடு, டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், 45. அவர், சேலத்திலிருந்து, ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, மினி லாரியில், ஏற்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 19வது கொண்டை ஊசி வளைவு அருகே, லாரியை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது, பின்னோக்கி நகர்ந்த லாரி, சாலை பக்கவாட்டு திட்டில் இடித்து, காபி தோட்டத்தில் கவிழ்ந்தது. அங்குள்ள சவுக்கு மரத்தில் மோதி நின்றது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Winmeennews.comஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®® முகலிவாக்கம் விபத்துக்கு மின் வாரியம் பொறுப்பு அல்ல, நகராட்சி நிர்வாகமே பொறுப்பு : அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை : முகலிவாக்கத்தில் யாரோ பள்ளம் தோண்டியதால் வயர் வெளியே வந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முகலிவாக்கம் விபத்துக்கு மின் வாரியம் பொறுப்பு அல்ல, நகராட்சி நிர்வாகமே பொறுப்பு என்றும் அமைச்சர் தங்கமணி பேட்டியில் தெரிவித்துள்ளார். மாநகராட்சியோ, மின்சார வாரியமோ யார் காரணமாக இருந்தாலும் மின்சார விபத்து வருந்தத்தக்க விஷயம் என்றும் முகலிவாக்கம், சிட்லபாக்கம் மின் விபத்துகளை போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றும் நாமக்கல்லில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

இஸ்ரோ சிவன் தகவல்

நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை – இஸ்ரோ தலைவவர் சிவன்

எங்களால் நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை – சிவன்

சந்திரயான் 2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது – சிவன்

ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, எட்டு கருவிகளும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன – சிவன்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®® நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்

ஆத்தூர்: ஆத்தூர் நகர் பகுதியில், டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, 4, 8, 28, 29, 32வது வார்டுகளில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம், நேற்று நடந்தது. அதை தொடங்கிவைத்து, நகராட்சி கமிஷனர் சரஸ்வதி பேசுகையில், ”அனைத்து வார்டுகளில், மழைக்காலம் முடியும் வரை, தினமும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். அதை அருந்தினால் காய்ச்சல் தடுக்கப்படும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்,” என்றார்.

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: அக்டோபர் 21 ல் இடைத்தேர்தல்

நாங்குநேரி
விக்கிரவாண்டி

அக்-24 வாக்கு எண்ணிக்கை
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: மஹாராஷ்டிரா மற்றும் ஹரியான மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

மகாராஷ்டிரா சட்டசபை நவம்பர் 9-ம் தேதியும், அரியானா சட்டசபை நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைகிறது.

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளும், அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது.
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: செய்திகள் 24/7

UPDATE

மதுரையில் சிக்கிய போலி மருத்துவ மாணவர் ரியாஸ் தல்லாகுளம் போலீஸில் ஒப்படைப்பு

மாணவர் ரியாஸ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தகவல்

போலி சான்றிதழ் வழங்க ரூ. 60 லட்சம் வரை கைமாறியதாக பரபரப்பு தகவல்

டெல்லி கும்பல் கைவரிசை காட்டி பல கோடி சம்பாதித்துள்ளதாக பரபரப்பு தகவல்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ELECTION BREAKING:

மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல்:

செப்டம்பர் 27 வேட்புமனு தாக்கல்:

அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல்:

அக்டோபர் 24 வாக்கு எண்ணிக்கை.
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: செய்திகள் 24/7

இரயில் செய்திகள்

சென்னை புறநகர் சேவையில் செப் 22ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிரடி மாற்றம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: செய்திகள் 24/7

இரயில் செய்திகள்

02842 சென்னை சென்ட்ரல்-சண்ட்ராகச்சி சிறப்பு ரயில் இன்று(செப்21) சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6:20க்கு பதிலாக இரவு 7:20க்கு புறப்படும்( ஒரு மணி நேரம் தாமதமாக)
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ?? BREAKINGNEWS

தமிழக சட்டசபை இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியீடு – செப்டம்பர் 23

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி – செப்டம்பர் 30

வேட்பு மனுக்கள் பரிசீலனை – அக்டோபர் 1

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் – அக்டோபர் 3

தமிழக சட்டசபை இடைத் தேர்தல் தேதி – அக்டோபர் 21

இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அக்டோபர் 24
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®®12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திண்டுக்கல்லில் தலா 6 செண்டி மீட்டரும்.

சேலம் மேட்டூரில் 4 செண்டி மீட்டரும், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 3 செண்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: JUSTIN

®®நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது

அமமுகவுக்கு நிரந்தரமாக தனி சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை

  • டிடிவி தினகரன் அறிவிப்பு

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®®எச்ஐவி பாதித்த தாயின் கருவிலிருந்து குழந்தைக்கு பரவாமல் தடுப்பதில் உலகத்திலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகில் கியூபா நாட்டிற்கு பிறகு குழந்தைக்கு எச்ஐவி தொற்று வராமல் தடுப்பதில் தமிழகம் இரண்டாமிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: Breaking

®®தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய ஆலோசனை என தகவல்

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: Breaking

®®”விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு வழங்கலாம்” – அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: JUSTIN

®®நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயம் வருகை!

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING

®®நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்

ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23-ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்

  • அதிமுக

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®®விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு:

நாளை காலை 10 மணி முதல் நாளை மறுநாள் மாலை 3 மணி வரை விருப்ப மனு வழங்கலாம் – அ.தி.மு.க.

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®®விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 2019

விருப்ப மனு பெறுதல் தேதி அறிவிப்பு

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®®சென்னை கோயம்பேடு, வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழை

®®ஊடகதளம்
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

கருப்பாயி எப்படி எல்லாம் வாழ்ந்தவரோ தெரியவில்லை.. ஆனால் அவரது இறுதி ஊர்வலம் மிக கொடுமையாக அமைந்து விட்டது. கழுத்தளவு தண்ணீரில் தோளில் சுமந்தபடி.. நீந்தி நீந்தி கரைசேரும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சேர்பாடி என்ற கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு செல்ல இவர்களுக்கு பாதை இல்லை.அதனால், கானாறு வழியாகத்தான் எந்த சடலத்தையும் கொண்டு செல்ல முடியும். இந்த கானாறு ஆபத்தானது.. அவ்வளவு சுலபத்தில் நீந்தி கரை சேர முடியாது. இப்படியே பல வருஷமாக இந்த அவலம் இருந்து வருகிறது. கானாறு வழியாக ஒரு பாலம் கட்டி தருமாறு இந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எத்தனையோ முறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கருப்பாயி பாட்டி இறந்துவிட்டார். இவ்வளவு நாள் உடம்பு சரியில்லாமல் இருந்தவர், நேற்று உயிரிழந்தார். கடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி…வைகோவை விமர்சித்து போஸ்டர் உயிரிழந்த கருப்பாயி பாட்டியின் சடலத்தையும், இதே ஆற்று தண்ணீரில்தான் மக்கள் கொண்டு வந்துள்ளனர். 2 நாளைக்கு முன்னாடி பெய்த மழையல் கானாறில் நிறைய தண்ணீர் ஓடுகிறது. இந்த கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை தோளில் வைத்து நீந்தி நீந்தி கரையை நோக்கி வருகிறார்கள் மக்கள். இப்படியே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சடலத்தை தூக்க வருகிறார்கள். ஆர்ப்பரித்து ஓடும் நீரில், பாடையை தூக்கி கொண்டு நீந்தி வரும் இந்த காட்சியை அங்கிருந்தோர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிடவும், அது இப்போது வைரலாகி வருகிறது. எப்படியாவது இந்த மக்களக்கு ஒரு பாலம் கட்டி தரக்கூடாதா என்ற பலமாக கோரிக்கையும் எழுந்து வருகிறது. 3 வருஷமா உள்ளாட்சி தேர்தலை நடத்தல.. அப்படி நடத்தியிருந்தால் இப்படியெல்லாம் ஒரு அவல நிலை மக்களுக்கு ஏற்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது.
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிடப் போவது எந்த கட்சி என்பதில்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் இருக்கிறது.

நாங்குநேரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் வசந்தகுமார். இவர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இதனால் நாங்குநேரில் எம்.எல்.ஏ. பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டது. அப்போது முதல் தற்போது இத்தேர்தலானது திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது.வேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி… விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி!கடுப்பான காங்கிரஸ்முதலில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். ஆனால் இது தங்களது தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சி இதை ரசிக்கவில்லை.கலகமூட்டிய கராத்தேஇந்த களேபரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தனித்து போட்டியிட வேண்டும் என கொளுத்திப் போட்டார் கராத்தே தியாகராஜன். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கராத்தே தியாகராஜன், காங்கிரஸில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.தனித்து போட்டி என சர்ச்சைநாங்குநேரி தொகுதி யாருக்கு என்பதில் திமுகவும் கனத்த மவுனம் காத்து வந்தது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸுக்குத்தான் ஒதுக்க வேண்டும் இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் கருத்துகள் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடப் போகிறதா? என்கிற கேள்வி எழுந்தது.அக்டோபர் 21-ல் தேர்தல்இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அக்டோபர் 21-ந் தேதி நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறார். இத்தொகுதியில் அக்டோபர் 24-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது இத்தொகுதியை காங்கிரஸுக்கே திமுக ஒதுக்குமா? அல்லது திமுக போட்டியிட் முனையுமா? என்பதுதான் கேள்வி. ஏற்கனவே காங்கிரஸ்-திமுக கூட்டணியை உடைக்கும் வேலைகளில் பாஜக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. திமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி தொடருவதை பாஜக விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் நாங்குநேரி தொகுதி குறித்த திமுகவின் முடிவு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்புஇதனிடையே இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது நாங்குநேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[9/21, 7:10 PM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த காமெடி நடிகர் சதிஷ் அவர்களுக்கு அரேஞ்டு மேரேஜ் டிசம்பரில் டும் டும் டும்

®®நடிகர் சதீஷ், பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார். அதில், எதிர்நீச்சல்',கத்தி’, ஆம்பள',பைரவா’, `ரெமோ’ போன்ற படங்கள் முக்கியமானவை.

சதீஷ்
®®தமிழ் படம்' மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் சதீஷ்.மதராசப்பட்டினம்’, எதிர் நீச்சல்',மான் கராத்தே’ ஆகிய படங்களில் ஆரம்பித்து தற்போது `சிக்ஸர்’ வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இவருக்குத் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது.

®®சினிமாவில் நடிக்க வருவதற்குமுன் கிரேஸி மோகனுடன் 8 வருடங்கள் பணியாற்றிய இவர், சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகத் தன்னை அடையாளம் காட்டத் தொடங்கினார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர், விஜய், விஷால், தனுஷ், பிரபுதேவா எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அதில்,எதிர்நீச்சல்’, கத்தி',ஆம்பள’, பைரவா',ரெமோ’ போன்ற படங்கள் முக்கியமானவை.

சதீஷ்
சதீஷ்
®®எல்லா பேட்டிகளிலும் இவர் நடிக்கும் படங்களைப் பற்றி கேட்கப்படுகிறதோ இல்லையோ, டெம்ப்ள்டேட்டாக இவரிடம் கேட்கப்படும் கேள்வி, `எப்போ கல்யாணம்?’. அதற்கு விடை தரும் விதமாக நேற்று இவருக்கு நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டது. இதையடுத்து, அவரை போனில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். இதற்காக நன்றி சொன்னவர், தனக்கு டிசம்பர் மாதம் திருமணமாகப் போவதையும் புதுமாப்பிளை டோனிலே சொன்னார்.

®®என்ன ப்ரதர், லவ் மேரேஜா?'' எனக் கேட்டதற்கு,அதெல்லாம் இல்ல ப்ரதர். வீட்டுல பார்த்த பொண்ணைத்தான் கல்யாணம் பண்றேன். அரேஞ்டு மேரேஜ்தான்” என்றார்.

Winmeennews.com100% காதல்',4ஜி’, `அருவம்’ உள்ளிட்ட பல படங்கள், இவர் நடிப்பில் வெளிவரக் காத்திருக்கின்றன.

Winmeennews.comஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button