அண்ணி ஜோதிகாவுடன் ஜோடி போடும், சூர்யா தம்பி கார்த்தி?ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்ணன் சூர்யா வெளியிட்டார்? படம் பெயர் தம்பியாம்?
கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் அதே தான்!.சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளி சரவெடியாக வெளியான கார்த்தியின் கைதி 100 கோடி வசூலை கடந்து வெற்றிநடை போடுகிறது. இந்நிலையில், அடுத்த மாதமே அடுத்த ஆக்ஷனுக்கு கார்த்தி தயாராகி விட்டார். அண்ணி ஜோதிகாவுடன் முதன்முறையாக கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு, நாம் முன்னதாக சொன்ன ‘தம்பி’ டைட்டிலே தான். கார்த்தியின் ‘தம்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை அண்ணன் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி மாதவனுக்கு ஆக்ஷன் அவதாரத்தை கொடுத்த தம்பி படத்தின் டைட்டில் தற்போது, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி த்ரில்லர் படத்திற்கு கிடைத்துள்ளது. வியாகாம் 18 மற்றும் பேரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு சொன்ன மாதிரியே விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைத்து, சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துடன் கார்த்தியின் தம்பி மோதும் என தெரிகிறது. பாபநாசம் படத்தை போலவே இந்த படத்திலும் பல ட்விஸ்ட்டுகள் இருக்கும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழில் தம்பி என வெளியாகவுள்ள இந்த படம் தெலுங்கில் தொங்கா என உருவாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான கைதி படமும் வசூலை வாரி குவித்துள்ள நிலையில், தம்பி படமும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. கைதி: தனித்துவமான கதைக்களம் கொண்டாடும் சினிமா ரசிகர்கள் கைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா கைதி படத்திற்கு முதலில் ஹீரோவாக தேர்வானவர் மன்சூர் அலிகான் தான் சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி.. கைதியாக அசத்தியவர் ’தம்பி’யாக வருகிறார்! கோலிவுட்டில் தனுஷின் தம்பியும் ஹீரோ தான் தெரியும்ல? புதிய சர்ச்சையில் மீரா! நன்பேன் டா என்று சொல்லி தோள் கொடுக்க மனசு வேண்டும் மூன்று மடங்கு லாபம்.. 100 கோடி கிளப்பில் இணைந்த கைதி! கைதியின் வெற்றிக்கு பின்னாடி இப்டி ஒரு சென்டிமென்ட்டா.. அப்போ இனி இதையே பாலோ பண்ணுங்க கார்த்தி! தொடர் ஹவுஸ்ஃபுல்.. 100 கோடி கிளப்பை நெருங்கும் கைதி! முதலில் தனுஷ்.. அடுத்து கார்த்தி.. மகேஷ் பாபுவின் டார்கெட்! கைதியில் குரலுக்காகவே வில்லனாக மாறிய அர்ஜுன் தாஸ் – மோதிய ஜார்ஜ் மரியன் கைதி: தனித்துவமான கதைக்களம் கொண்டாடும் சினிமா ரசிகர்கள் கைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா கைதி படத்திற்கு முதலில் ஹீரோவாக தேர்வானவர் மன்சூர் அலிகான் தான் சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி.. கைதியாக அசத்தியவர் ’தம்பி’யாக வருகிறார்! கோலிவுட்டில் தனுஷின் தம்பியும் ஹீரோ தான் தெரியும்ல? புதிய சர்ச்சையில் மீரா!