t

நம்மை எல்லாம் ஹலோ சொல்ல வைத்த அறிவியல் அறிஞர்அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லின் வரலாறு??ஆகஸ்ட் 2-தொலைபேசியின் தந்தை நினைவு தினம் இன்று…???

advertisement by google

இன்று ஆகஸ்ட் 2

advertisement by google

நம்மை எல்லாம் ஹலோ சொல்ல வைத்த அறிவியல் அறிஞர்
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லின் நினைவு தினம் இன்று…

advertisement by google

இன்றைக்கு உலகின் எந்த மூலையில் உள்ள யாருடன் வேண்டுமானாலும் நொடிப்பொழுதில் பேசுவது இயல்பாகிப் போன ஒரு நிகழ்வு; காரணம் தொலைபேசி. இதன் தந்தை கிரகாம் பெல்.

advertisement by google

ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். கொஞ்ச நாட்கள் மட்டுமே பள்ளியில் தங்கிப் படித்தார் .பின் வீட்டிலேயே பாடம் கற்றார் .இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார்.அவரின் வழியொற்றி செவித்திறன் அற்ற மற்றும் பேசும் திறன் இழந்தக் குழந்தைகளுக்கு பாடம் எடுத்து சாதித்தார். அவர்களில் பலரைப் பேச வைக்கும் முயற்சியிலும் சாதித்துக் காட்டினார்.

advertisement by google

அப்படி பாடம் சொல்லப் போன இடத்தில் மேபல் எனும் பெண்ணிடம் காதல் பூண்டார் . அவரின் அப்பா செய்த நிதியுதவியில் தொலைபேசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் .பின் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து ஒரு முனையில் பேசுவதை வேறு முனையில் கேட்க வைக்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் சாதித்தும் காட்டினார்.

advertisement by google

பாஸ்டனில் மேல் தளம் மாறும் கீழ்த்தளத்துக்கு இடையே ஒயரின் மூலம் இணைப்பு கொடுத்திருந்தார்கள். வாட்சன் கீழ்த்தளத்தில் இருந்தார். கிரகாம்பெல் மேலிருந்து பேசினார். அப்பொழுது ஒரு பக்கம் கேட்க மட்டுமே முடியும். “மிஸ்டர் வாட்சன்! இங்கே வாருங்கள்…” எனக் குரல் கேட்க உற்சாகமாக மேலே ஓடினார் -அது தான் முதன்முதலில் தொலைபேசியில் ஒலித்த வார்த்தை – அங்கே மேலே போன பொழுது பெல்லின் உடம்பில் அருகிலிருந்த அமிலம் பட்டிருந்தது. “நான் உங்களின் குரலைக் கேட்டேன்!”என சொன்னதும் தான் தாமதம். அமில எரிச்சல் எல்லாம் பறந்து போக இவரைக் கட்டியணைத்துக் கொண்டார் பெல்.

advertisement by google

எனினும் இவர் பதிவு செய்ய கொஞ்சம் சுணக்கம் காட்டினார்; இவர் பதிவு செய்ய வெண்டிய கோப்புகள், கருவிகளை விட்டு விட்டு தொடர்வண்டியில் ஏறும் பொழுது அதைக் கெஞ்சும் பார்வையோடு அவரின் இதய நாயகி மேபல் கையில் திணித்தார் .வண்டி புறப்பட்டு விட்டது .அவர் போன அதே நாளில் எலிஷா கிரே எனும் நபரும் வந்து இருந்தார்.பின் எலிஷா விட்டுக் கொடுக்க கிரகாம் பெல்லின் கருவி டெலிபோன் ஆனது. எனினும் அவர் போனில் அழைக்கப் பயன்படுத்தியது கப்பல்களில் பயன்படுத்தப்படும் அஹோய் எனும் வார்த்தையை தான்; ஹலோ என மாற்றியது எடிசன் தான். உலகம் முழுக்க பிறரின் குரலைக் கேட்டு பதிலளிக்கும் முறைக்கான முதல் விதையை ஊன்றிய கிரகாம் பெல்லின் நினைவு தினம் இன்று.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button