இந்தியாஉலக செய்திகள்

அனைவரும் தேசவிரோதிகள் என்றால்; யார் தான் இந்தியர்கள்✍️மோடி அரசை வெளுத்து வாங்கிய மெகபூபா முப்தி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அனைவரும் தேசவிரோதிகள் என்றால்; யார் தான் இந்தியர்கள்?”

advertisement by google

மோடி அரசை வெளுத்து வாங்கிய மெகபூபா முப்தி!

advertisement by google

பா.ஜ.க அரசு எதிர்கட்சிகளின் மீது அடக்குமுறையை கையாளுவதாக காஷ்மீர் முன்னாள் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

advertisement by google

கோபு ஸ்டாலின்

advertisement by google

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர், நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல். இந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று முன் தினம் தொங்கி, வருகிற டிசம்பர் 19ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது.

advertisement by google

மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாக போட்டியிடுகின்றன.

advertisement by google

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கும் இந்த தேர்தலில், எதிர்கட்சிகள் துணிச்சலோடு போட்டியிடுவதாக அறிவித்தது முதல், எங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது என காஷ்மீர் முன்னாள் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

advertisement by google

மேலும் இதுதொடர்பாக மெகபூபா முப்தி கூறுகையில், “தேர்தலில் பரப்புரை செய்ய அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதம்; பரப்புரை செய்யவே அனுமதிக்காவிட்டால் வேட்பாளர்கள் என்ன செய்ய முடியும்?

அதுமட்டுமல்லாது, முஸ்லீம்களை பாகிஸ்தானி என்றும், சீக்கியர்களை காலிஸ்தானி என்றும், செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சலைட்டுகள் என்று பா.ஜ.க அழைக்கிறது. அப்படியென்றால் அனைவரும் தேச விரோதிகள் என்றால், யார் தான் இந்தியர்கள்? ஏன் பாஜகவினர் மட்டும் தான் இந்தியர்களா?,

காஷ்மீரில் தேர்தலைகளை நடத்துவது மட்டுமே பிரச்சனைகளை தீர்த்து விடாது, நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்கும் வரை பிரச்சனைகள் தீராது” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. அதில் ஜம்மு பிரிவில் 64.2 சதவிகித வாக்குகளும், காஷ்மீர் பிரிவில் 40.65 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button