கமல்ஹாசன் பிரச்சாரம் ஒத்திவைப்பு: காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் ஓய்வு தேவைப்படுவதாக ட்விட்டர் பதிவு✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கமல்ஹாசன் பிரச்சாரம் ஒத்திவைப்பு: காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் ஓய்வு தேவைப்படுவதாக ட்விட்டர் பதிவு
காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சை தொடர்ச்சியாக மற்றொரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்றும் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் வீடியோ வழியாக பேசுவேன் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.