இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திரைப்பட நடிகரும் ,அ.இ.ச.ம.க – நிறுவன தலைவருமான திரு.ஆர்.சரத்குமார் கடந்து வந்த பாதை????முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

???அ.இ.ச.ம.க – நிறுவனர் / தலைவர்
திரு.ஆர்.சரத்குமார் கடந்து வந்த பாதை???

advertisement by google

”சரித்திரம் படைத்தவர்களின் அசாதாரண வெற்றி வாழ்க்கை மிக சாதாரணமாகத்தான் துவங்குகிறது”

advertisement by google

ஆம்..
img

advertisement by google
திரு.ஆர்.சரத்குமார்,

நிறுவனர் – தலைவர்
இணைந்திருக்க:

1970களில், பெங்களூரு வீதிகளில் செய்தித்தாள் விநியோகம் செய்துகொண்டிருந்த அந்தச் சாதாரண இளைஞனுக்குத் தெரியாது..

advertisement by google
"

தான் ஒரு பத்திரிகையாளராக ஆவோம் என்று..!

தான் ஒரு தொழில் அதிபர் ஆவோம் என்று.!

தான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மாறுவோம் என்று..!

தான் ஒரு வெற்றிக் கதாநாயகனாக வலம் வருவோம் என்று..!

தான் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஆவோம் என்று..!

தான் ஒரு சட்டசபை உறுப்பினர் ஆவோம் என்று..!

தான் ஒரு தலைசிறந்த அரசியல் கட்சிக்குத் தலைவராவோம் என்று..!

எல்லாவற்றுக்கும் மேலாக கோடிக் கணக்கான மக்களின் அன்பிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்போம் என்று..!
" 

அத்தனைப் பாதைகளிலும் உழைப்பை மட்டும் முழுமையாக கொண்டு உயர்ந்த
அந்த இளைஞன் தான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் புரட்சி திலகம் ஆர்.சரத்குமார் அவர்கள்!.

advertisement by google

தூய்மை எளிமை நேர்மை அதற்கான முன்னேற்றம் என்ற தெளிந்த சிந்தனையுடன், வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கான பாதையை சரியாக வகுத்துக்கொண்டு உயர்ந்து நிற்கிறார்.

advertisement by google

தன்னை முன்னேற்றிக்கொண்டதுடன், தன்னை சார்ந்த மக்களையும் தான் சார்ந்த மாநிலத்தையும் தன்னுடைய
தேசத்தையும் முன்னேற்றும் நோக்கத்துடன் சமத்துவ கொள்கையுடன் ஒரு இயக்கத்தினை நிறுவி, கோடிக் கணக்கான தொண்டர்களின் ஆசைமிகு தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

advertisement by google
"

    சிந்தனையில் தெளிவு

    செயலில் தூய்மை

    பண்பில் எளிமை

    பொதுவாழ்வில் நேர்மை

    அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பது

    உடல் வலிமை

    மொழிவளம்

    சிறந்த தலைமை பண்பு

    உழைப்பின்மீது நம்பிக்கை

    மனித நேயம்

    எந்த சூழ்நிலைகளிலும் தன்னை ஒரு தொண்டனாக பாவித்து வேலையில் ஈடுபடுவது

    நூல்கள் படிக்கும் வழக்கம்

    அந்நூல்களின் நல் கருத்துக்களை உள்வாங்கி நடைமுறை படுத்துவது

" 

இத்தனை பரிமாணங்களையும் வளர்த்து கொண்டு தன் தொண்டர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துகொண்டு இருப்பவர் திரு.ஆர்.சரத்குமார் அவர்கள் !

இளமைப்பருவம் : 1954,ஜூலை 14ம் நாள் அன்று,குடும்பத்தில் திரு.ராமநாதன்,திருமதி புஷ்பலீலா தம்பதிகளுக்கு கடைக்குட்டியாக செல்லபிள்ளையாக பிறந்தார்.

இந்திய வானொலியில் தந்தை பணிபுரிந்தபோது, அண்ணன் சுதர்சன், தமக்கை மல்லிகாவுடன், சிறுவயது உற்சாகத்துடன் தலைநகர் தில்லியில் கழிந்தது.

நான்காம் வகுப்பு படிக்கும்போது தந்தையார்க்கு சென்னைக்கு பணிமாற்றம் ஏற்பட்டதால் குடும்பம் சென்னை வந்தது.

சிறுவன் சரத்குமார், இளைஞன் ஆகும்வரை செண்ட்ரல் பள்ளி, புனித பேட்ரிக் பள்ளி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி ஆகியவை அவரை வார்த்தெடுத்திருந்தன.

கணிதத்தில் இளநிலைப்பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல், மிஸ்டர்.மெட்ராஸ் யுனிவர்ஸிட்டி என்ற பட்டத்தையும் சேர்த்துப் பெற்றவர்.

தந்தைக்கு உடல் ஆரோக்யத்தில் இருந்த ஆர்வம், மகனையும் ஊக்கிவித்து படிக்கும்போது ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட் உள்பட்ட அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்துவிளங்க செய்தது.

NCC யில் பயிற்சிபெற்று, 1970ல் டெல்லியில் நடைபெற்ற குடியரசுதின விழா அணிவகுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டு, தமிழ்நாட்டின் சார்பில் பங்குபெற்றார்.

கல்லூரிப்படிப்புக்குப் பின், பத்திரிகைப்பணி, சொந்தத்தொழில், திரைப்படத் தயாரிப்பு, கதாநாயகனாக வளர்ச்சி, சமூக
ஆர்வம், பொதுப் பதவிகள், அரசியல் பொறுப்பு, கட்சித் தலைவர் என்று ஒவ்வொரு காலகட்டமும் அதிவேகமாக அவரது வளர்ச்சியையும், எண்ணங்களையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தலைவர் திரு.ஆர்.சரத்குமார் கடந்துவந்த பாதைகளும் பணிகளும்:

பத்திரிக்கைத் துறை:

பத்திரிகை நிருபர்: சிறுவயதிலிருந்தே பத்திரிகை நிருபராவதில்,மிகுந்த விருப்பம் நிறைந்தவராக திரு.ஆர்.சரத்குமார் அவர்கள் திகழ்ந்தார். ஆகவே தினகரன் நாளிதழின் பெங்களூரு பதிப்புக்கு நிருபராகப் பணிபுரிந்தார்.

பத்திரிகை ஆசிரியர்: எழுத்தின்மீதும், அதன் தாக்கத்தின்மீதும் எப்போதும் நம்பிக்கை கொண்ட தலைவராகத் திகழும் திரு.சரத்குமார் அவர்கள் ’மீடியா வாய்ஸ்’ (MEDIA VOICE) என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்திவந்தார்.

அதில் ஒவ்வொரு மாதமும் அவர் எழுதிய கட்டுரைகள் பலதரப்பிலும் பாராட்டப்பட்டது.

அரசியல்:

சரியான சிந்தனையுடன்,வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தனது உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதன்,அந்த வெற்றியை தான் சார்ந்த சமூகத்திற்கு எந்த விதத்திலாவது சமர்ப்பிக்கவேண்டும் என்று நினைப்பான்.

அந்த நினைப்புதான், திரு.ஆர்.சரத்குமார் அவர்களுக்கும் வந்திருக்கிறது.தான் வாழும் சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்று நினைத்ததன் பலனாக, தூய்மையான அரசியலில் ஈடுபடத் துவங்கினார்.

மாநிலங்களவை உறுப்பினர்: 2001ம் ஆண்டு முதல் 2006 வரை, இந்தியப்பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.

2007ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் சமத்துவ மக்கள் கட்சியைத் துவக்கினார்

சட்டமன்ற உறுப்பினர்: 2011 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெரிந்த தலைவர் – தெரியாத செய்திகள் :

"

    ஒரு சிறந்த சுயமுன்னேற்றப் பேச்சாளர்

    ஆறு மொழிகளில் சரளமாக உரையாடக் கூடியவர்

    தினசரி உடற்பயிற்சி செய்பவர்

    அதிக அளவில் புத்தகங்கள் வாசிப்பவர்

    தேசப்பற்றின் காரணமாக,கையில், தேசியக்கொடியை பச்சை குத்திக்கொண்டிருப்பவர்

    முற்போக்கான சிந்தனையாளர்

    குடும்பத்தை நேசிப்பவர்

    மாற்றுக்கருத்தாளர்களையும் மதிப்பவர்

    பொதுவாழ்க்கையில் கண்ணியத்தை எப்போதும் கடைபிடிப்பவர், கடைபிடிக்க அறிவுறுத்துபவர்

" 

திரைத்துறை:

தயாரிப்பாளர்: திரைப்படத் தயாரிப்பாளராக,வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார். மிகவும் நட்பு பாராட்டும் நல்ல தயாரிப்பாளராக அறியப்பட்டார்.

நடிகர்:
வில்லன் பாத்திரங்களில் நடிக்கத்துவங்கி, பின்னர் கதாநாயகனாக வளர்ச்சி அடைந்தார்.

இவர் நடித்த, சூரியன், நாட்டாமை, சூரியவம்சம், ஐயா, பழசிராஜா படங்கள் உட்பட பல படங்கள்
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாக உள்ளன.

யாரும் எதிர்பார்க்காத வகையில் காஞ்சனா என்ற படத்தில், திருநங்கையாக நடித்து, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றார்.
இதுவரை 133 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் சங்கம்:
தென்னிந்திய நடிகர் சங்கம், பாரம்பரியம் மிக்க, பெரிய அமைப்பு. அதில் மூன்றுமுறை தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சங்கத்துக்கு பல நல்ல திட்டங்களை வகுத்து, அனைத்து உறுப்பினர்களும் பயன்பெறும்
வகையில் செயல்பட்டுவருகிறார்.

தொடர்ந்து தன் திறமைகளை மேன் மேலும் மெருகூட்ட என்றுமே அவர் தவறியதில்லை. தற்போதய சினிமா மற்றும் அரசியல் வாழ்வில் இவரை போன்றவர்களை காண்பது மிக மிக அரிது.

விருதுகள்:
பல்வேறு விருதுகள் அவரது கலைப்பயணத்தை அலங்கரித்துள்ளன.

தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி(1993)

தமிழக அரசு விருதுகள் :

"

    1994 – தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருது - நாட்டாமை

    1996 – எம்.ஜி.ஆர் விருது

    1998 – தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருது – நட்புக்காக / சிம்மராசி

" 

ஃபிலிம்ஃபேர் விருது:

"

    1994 – ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த தமிழ் நடிகர் – நாட்டாமை

    1998 – ஃபிலிம்ஃபேர் விருது- சிறந்த தமிழ் நடிகர் – நட்புக்காக

" 

சினிமா எக்ஸ்பிரஸ் விருது:

"

    1990 – சிறந்த வில்லன் நடிகர் – புலன் விசாரணை

    1992 – சிறந்த நடிகர் – சூரியன்

    1994 – சிறந்த நடிகர் – நாட்டாமை

    1997 – சிறந்த நடிகர் - சூரியவம்சம்

    2000 – செவாலியே சிவாஜிகணேசன் விருது

" 

மற்ற விருதுகள்:

"

    1997 – தினகரன் சினிமா –சிறந்த நடிகர் விருது – சூரியவம்சம்

    1997 – சினிமா ரசிகர்கள் விருது – சிறந்த நடிகர் – சூரியவம்சம்

    2005 – சிவாஜிகணேசன் விருது

    2006 – எம்.ஜி.ஆர். – சிவாஜி விருது – தலைமகன்

    2009 – ஆசியாநெட் நடுவர் தேர்வு விருது - பழசிராஜா

    2009 – வனிதா மலையாள இதழ் – சிறந்த நடிகர் விருது – பழசிராஜா

    2009 – சத்யன் நினைவு விருது – சிறந்த நடிகர் – பழசிராஜா

    2009 – ஜெய்ஹிந்த் தேசபக்திப் பெருமை விருது – பழசிராஜா

    2009 – மாத்ருபூமி அமிர்தா நடுவர் சிறப்பு விருது - பழசிராஜா

    2011 – SIIMA சிறந்த சார்பு நடிகருக்கான விருது – காஞ்சனா – முனி2

    2011 – விஜய் விருது – சிறந்த சார்பு நடிகர் – காஞ்சனா – முனி 2

    2013 – ரெயின்போ நல்லெண்ணத் தூதுவர் விருது

    2013 – நார்வே தமிழ்த் திரைப்பட விருது – தமிழ்த் திரையுலக சின்னம்

" 

இத்தனை விருதுகள் பெற்றபோதும், அத்தனையையும் அவர் மதித்தாலும், பொது இடங்களில் எளிய வறிய மக்கள் தன் மேல் காட்டும் பரிவும் பாசமும்தான் விலைமதிப்பு இல்லாதது என்றே நெகிழ்ச்சியுடனே கூறுவார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button