இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உள்ளாட்சி தேர்தலை தடைவிதிக்க அல்லது தள்ளி விதிக்க வேண்டி திமுக உட்பட10க்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் மனு?

advertisement by google

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

advertisement by google

இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது.

advertisement by google

தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

advertisement by google

அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது.

advertisement by google

திமுக சார்பாக இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது

advertisement by google

இந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்

advertisement by google

திமுக தனது மனுவில், பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் அதை செய்யாமல் தேர்தல் நடத்துகிறார்கள். இதனால் அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னர் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலோடு சேர்ந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது. இன்று இதில் மிக முக்கியமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button