இந்தியா

ஜி20 மாநாடு இந்தியாவில்✍️ புதுச்சேரியில் நடைபெறும் முதற்கட்ட மாநாட்டையொட்டி சாலையில் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்கள் பிடித்துச் செல்லப்பட்டுகாப்பகத்தில் அடைப்பு, ஒருசில பிச்சைக்காரர்கள் தப்பி ஓட்டம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

ஜி20 மாநாட்டையொட்டி சாலையில் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்கள் பிடித்துச் செல்லப்பட்டுகாப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தாண்டு இந்தியா ஏற்று நடத்துகிறது. அதையொட்டி 2023 ஆம் ஆண்டுக்கான பிரதிநிதிகள் மாநாடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்று தொடங்கியது. ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

advertisement by google

மாநாட்டையொட்டி புதுச்சேரியின் பிரதான சாலைகள் புதுப்பிக்கப்பட்டும்டிவைடர்களில் வர்ணம் பூசியும்பூச்செடிகள் நட்டும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சாலைகளில் சுற்றித் திரிந்த பிச்சைக்காரர்களை சமூக நலத்துறையினர் போலீஸ் உதவியுடன் பிடித்து நகராட்சி காப்பகங்களில் தங்க வைத்துள்ளனர்.

advertisement by google

அங்கு அவர்களுக்கு வரும் 31 ஆம் தேதிவரை உணவு வழங்கவும்மருத்துவ உதவி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலர் காப்பகம் செல்ல மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையோரம் படுத்திருந்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் பிச்சை எடுத்தவர்கள் என அனைவரையும் நகராட்சி அதிகாரிகள் பிடித்துச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button