மருத்துவம்

கோவில்பட்டியில் தலைசிறந்த ஹோமியோபதி மருத்துவமனையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ,கனி ஹோலிஸ்டிக் ஹோமியோ கிளினிக் Dr.P. சங்கீதா BHMS,DNHE ஹோமியோபதி மருத்துவர் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ராஜிவ் நகர், 6 வது தெரு PH.NO : 9384463585 Instagram id – kani_holistic_homoeo_clinic✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

ஹோமியோபதி மருத்துவம்
ஹோமியோபதி மருத்துவம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன் எம் டி அவர்களால் 1796 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நோய்களை முழுமையாகவும் நிரந்தரமாகவும் பக்கவிளைவுகள் இன்றியும் பாதுகாப்பான முறையில் குணப்படுத்துதல் ஹோமியோபதி மருத்துவத்தின் நோக்கமாகும்.

advertisement by google

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் மற்ற மனிதர்களிலிருந்து வேறு படுவர். எல்லா நோய்களும் எல்லோருக்கும் வருவதில்லை. ஒவ்வொருவரின் உடல்வாகு, உணவு முறை, பழக்கவழக்கங்கள், பணிச்சூழல், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, மரபணு ஆகியவற்றை பொருத்தே நோய்கள் வருகின்றன. ஒரு நோயாக இருந்தாலும் அதன் அறிகுறிகள் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே நோய் கொண்ட இருவரின் நோய் அறிகுறிகள் வெவ்வேறாக இருப்பதை நாம் காணமுடியும்.

advertisement by google

ஆகவே ஹோமியோபதி மருத்துவம் ஒவ்வொரு மனிதரையும் அவரவரின் தனித்தன்மை, நோய் அறிகுறிகள், உடல் வாகு , பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, ஆகியவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கிறது. இதன் மூலம் நோய்கள் நிரந்தரமாகவும் பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பான முறையிலும் குணமாகின்றன.

advertisement by google

ஹோமியோபதி மருத்துவம் நோயின் பெயரை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட நோய் அறிகுறிகளை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கிறது. ஆகவே நோய் அறிகுறிகள் என்பது ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சைக்கு மிகவும் இன்றியமையாதது.

advertisement by google

நோயாளிகள் தங்கள் நோய் அறிகுறிகளை எவ்வளவு தெளிவாகவும்,சரியாகவும், துல்லியமாகவும் கூறுகிறார்களோ அந்த அளவுக்கு சரியான மருந்தை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சிகிச்சை அளித்தால் நோய்களிலிருந்து விரைவாக குணம் பெற முடியும். நோயாளிகள் தங்கள் நோய் அறிகுறிகளை கவனித்து யோசித்துப் பார்த்து தெளிவாகவும் துல்லியமாகவும் சரியாகவும் கூறும்போது சிகிச்சை அளிப்பதற்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

advertisement by google

எனவே நோயாளிகள் தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு தங்கள் அறிகுறிகளை கவனித்து சொல்லலாம்; வேண்டுமானால் ஒரு வாரம் அல்லது இரண்டு வார காலம் கூட எடுத்துக்கொண்டு தங்களின் நோய்க்குறிகளை கவனித்து தெளிவாக கூறலாம்.

advertisement by google

ஏனென்றால் தெளிவாக கூறப்படாத நோய் அறிகுறிகளை வைத்துக்கொண்டு சிகிச்சை அளிப்பது சிகிச்சைக்கான காலத்தை அதிகமாக்குகிறது. அதேவேளையில் தெளிவாக கூறப்பட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கும்போது விரைவாக குணம் கிடைக்கிறது.

advertisement by google

அதுமட்டுமின்றி உங்களுடைய பசி, தாகம் ,வியர்வை, தூக்கம், கனவுகள், கழிவு வெளியேற்றம் (சிறுநீர் மலம்),மாதவிடாய் (பெண்கள் ), மனநிலை, பயம், கோபம், ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தங்கள் நோய்களைப் பற்றி விவரம் சொல்லும்போது
1.நோய் எவ்வளவு காலமாக இருக்கிறது?
2.எவ்வாறு நோய் ஆரம்பித்தது?
3.எந்தெந்த காரணங்களால் இந்த நோய் உருவாகி இருக்கலாம்?
4.நோய் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது?
5.உங்கள் தொந்தரவுகள் உடலின் எந்தெந்த உறுப்புகளில் உள்ளது?
6.ஒரு நாளின் 24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் உங்கள் தொந்தரவுகள் அதிகமாகின்றன? குறைகின்றன?
7.என்னென்ன செய்தால் உங்கள் தொந்தரவுகள் அதிகமாகின்றன குறைகின்றன?

ஆகிய விபரங்களை நீங்கள் துல்லியமாக கூறும் போது உங்களுக்கு சரியான மருந்து கொடுக்க முடியும். அதனுடன் நீங்கள் விரைவாக குணமடைய முடியும். ஹோமியோபதி மருத்துவத்தில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல் உங்கள் உடல், மனம் ஆகியவற்றின் உள்ள எல்லா தொந்தரவு களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதால் நீங்கள் உங்கள் உடலில் உள்ள அனைத்து தொந்தரவுகளையும் தெளிவாக சொல்லலாம்.

இதற்கு முன் உங்களுக்கு வந்த நோய்கள் குறித்த விபரங்கள் சிகிச்சைக்காக தேவைப்படுகின்றன. அந்த நோய்கள் எப்போது வந்தன, அதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட மருந்துகள் போன்ற விபரங்களும் ஹோமியோபதி சிகிச்சைக்கு மிகவும் அவசியம்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர் தாத்தா பாட்டி சகோதர சகோதரிகள் இரத்த உறவு முறைகள் ஆகியோரின் நோய்கள் பற்றிய விபரங்களும் சிகிச்சைக்கு தேவைப்படுகின்றன.

ஏனென்றால் மரபணு சார்ந்த நோய்கள் குடும்ப நோய்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டால் தங்களுக்கு அந்த நோய்கள் எதிர்காலத்தில் வராமல் தடுப்பதற்கும், இப்போது இருக்கும் நோய் மரபணு சம்பந்தப்பட்ட என்பதை தெரிந்து சிகிச்சை அளிக்கவும் தேவைப்படுகின்றன.

ஆகவே மேற்குறிப்பிட்ட விவரங்களை நீங்கள் சரியாகவும் துல்லியமாகவும் அளித்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பு நல்கி விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம்.

கனி ஹோலிஸ்டிக் ஹோமியோ கிளினிக்
Dr.P. சங்கீதா BHMS,DNHE
ஹோமியோபதி மருத்துவர்
உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்
ராஜிவ் நகர், 6 வது தெரு
PH.NO : 9384463585
Instagram id – kani_holistic_homoeo_clinic

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button