தமிழகம்

“வந்தே பாரத் இரயில்” கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்”த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் கோரிக்கை

advertisement by google

“புதிதாக துவங்கவுள்ள “வந்தே பாரத் இரயில்” கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்”

advertisement by google

த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் கோரிக்கை

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் இன்று (23-09-2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

advertisement by google

தமிழகத்தில் வந்தே பாரத் இரயில் சேவை அடுத்தடுத்ததாக தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. அளிக்கிறது. ஏற்கனவே சென்னை கோவை இடையேயும், சென்னை பெங்களுர் இடையேயும் துவங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மேலும் புதிதாக வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கவுள்ளது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது.

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள தென்காசி, சங்கரன்கோவில், திருவேங்கடம்,இராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய இரயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி இரயில் நிலையம் அமைந்துள்ளது.

advertisement by google

கோவில்பட்டி இரயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் 30 கோடிவரை வருமானம் ஈட்டிதந்து “ஏ” கிரேடு அந்தஸ்த்தில் உள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளையும், வணிக போக்குவரத்து மையமாகவும் திகழும் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் தற்பொழுது இயக்க இருக்கின்ற வந்தே பாரத் இரயில், கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கையை மத்திய அரசும், மத்திய இரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button