இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

இரவோடு இரவாக ஜியோவின் தினமும்3GB டேட்டா வழங்கும் புதிய ஜியோ பிளான் அறிமுகம்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

இரவோடு இரவாக.. தினமும் 3GB டேட்டா வழங்கும் புதிய ஜியோ பிளான் அறிமுகம்!

advertisement by google

ஜியோ நிறுவனம் ஒரு புதிய 3GB டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை, நன்மைகள் மற்றும் வேலிடிட்டி போன்ற விவரங்கள் இதோ!
Jio Rs.999 New Plan

advertisement by google

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.999 எனும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதன் போர்ட்ஃபோலியோவில் இணைத்துள்ளது. இந்த திட்டம் 3 ஜிபி அளவிலான தினசரி அதிவேக டேட்டாவை மொத்தம் 84 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்கும்.

advertisement by google

ரூ.999 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள்:

advertisement by google
  • 84 நாட்கள் செல்லுபடி
  • தினசரி 3 ஜிபி அதிவேக டேட்டா
  • 3 ஜிபி ஒதுக்கீடு தீர்ந்ததும் 64Kbps வேகத்தில் டேட்டா
  • வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்பு
  • ஜியோ அல்லாத அழைப்பிற்கு 3,000 நிமிடங்கள்
  • ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
  • ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா.

ஜியோவின் இந்த புதிய “காலாண்டு ப்ரீபெய்ட் திட்டமானது” ஏற்கனவே நிறுவனத்திடம் இருக்கும் ரூ.599 மற்றும் ரூ.555 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் அருகே அமர்கிறது. இந்த திட்டங்கள் முறையே 2 ஜிபி மற்றும் 1.5 ஜிபி அளவிலான தினசரி அதிவேக டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

advertisement by google

டேட்டா நன்மையை தவிர்த்து ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, பிற ஜியோ பயனர்களுக்கான வரம்பற்ற குரல் அழைப்புகள், லேண்ட்லைன் எண்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற மற்ற பொதுவான நன்மைகளையும் வழங்கும்.

advertisement by google

Jio : உங்களால் 1000GB டேட்டாவை வெறும் 7 நாளில் தீர்க்க முடியுமா? அப்படினா இத படிங்க!

advertisement by google

இந்த புதிய ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ஜியோ.காம் தளத்தின் தினமும் 3 ஜிபி டேட்டா பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே பட்டியலில் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்ட ரூ.349 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தை நேரடியாக மைஜியோ ஆப் மூலம் அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளம் அல்லது கூகுள் பே அல்லது பேடிஎம் போன்ற ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வருகையுடன் ஜியோவிடம் இப்போது 84 நாட்கள் செல்லுபடியை வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button