இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை முதன்முதலில் அறிமுக படுத்திய தினம் மே14,1796 இன்று? எட்வர்ட் ஜென்னரின் சாதனைகள்?அதேபோல் கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடிப்போம்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

? வரலாற்றில் இன்று மே 14, 1796 – Smallpox எனப்படும் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை முதன்முதலில் பயன்படுத்திய தினம் -அல்லது -அதனை அறிமுகப்படுத்திய நாள் !?

advertisement by google

இக்கண்டுபிடிப்புக்கு முன்னர் இந்நோயின் காரணமாக ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டுவந்தனர் . ஏராளமானோருக்கு கண் பார்வை போனது. எண்ணற்றோர் தங்களது உருவப் பொலிவை இழந்தனர்.

advertisement by google

பெரியம்மை என்பது கடவுள் மனிதர்களுக்கு அளிக்கும் தண்டனை என்றுதான் மக்கள் நம்பியிருந்தார்கள். இங்கே நமது நாட்டிலும்கூட பெரியம்மை மாரியம்மாளின் கோபம் என்றுதான் நம்பினார்கள்.

advertisement by google

ஆனால் அந்நோயும் சரியான தடுப்பூசி மூலம் குணப்படுத்தக் கூடியதே என்று உலகுக்கு உணர்த்தியவர் எட்வர்ட் ஜென்னர் ஆவார்.

advertisement by google

இன்று பெரியம்மை நோயின் அறிகுறிகள் உலகில் முற்றிலும் இல்லாமல் செய்த பெருமை இவரையே சாரும். இவரது மருத்துவக் கண்டுபிடிப்பால் பெரியம்மை நோய் இல்லாத உலகை இன்று காணமுடிகிறது.

advertisement by google

பெரிய அம்மை தடுப்பூசி போடப்பட்ட தினம் இன்று.

advertisement by google

ஜென்னர் அவர்கள் மருத்துவ கல்லுரி மாணவனாய் இருந்த காலத்தில், பால்பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படவில்லை என்பதை கண்டறிந்தார். அதற்கு காரணம் அவர்கள் கோவசூரி(cowpox) என்ற நோயால் ஏற்கனவே தாக்கப்பட்டவர்கள்.

advertisement by google

கோவசூரி(cowpox) என்பது பசுவின் மடியில் கொப்பளங்கள் ஏற்படுத்த கூடிய நோய். இது மனிதரை தொற்றும்போது தோலில் கொப்பளம், காய்ச்சல் போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்படுத்த கூடியது. அக்கொப்பளத்தில் உள்ள திரவம் பெரிய அம்மை நோய்க்கு தடுப்பு மருந்தாக செயல்படும் என்பதை கண்டறிந்தார்.

மே 14,1796 ஆம் ஆண்டு ஜென்னர் கோவசூரி(cowpox) நோயாளியின் கொப்பளத்திலிருந்த திரவத்தை எடுத்து ஜேம்ஸ் பிப் என்ற சிறுவன் கையில் செலுத்தினார். அந்த சிறுவனுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்பட வில்லை.

ஜென்னரின் இந்த அரிய கண்டுபிடுப்பு மனித குலத்தை அழிவில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.

ஐரோப்பிய மருத்துவர்கள், ஜென்னர் கண்டுபிடித்த வாக்சினை தடுப்பு மருந்தாக ஏற்றுக் கொண்டனர்.

விஞ்ஞானிகள், ஜென்னர் வழியில் போலியோ, கக்குவான், மஞ்சள்காய்ச்சல், டைபஸ், ஹெபாடடிஸ் B போன்ற நோய்களுக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தனர்.

உலக சுகாதார நிறுவனம் இன்று உலகில் எங்குமே பெரிய அம்மை நோய் இல்லை என்று பிரகடனப்படுத்தி உள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button