இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ100 அபதாரம் வசூலிப்பு?கோவில்பட்டி நகராட்சி சுகாதார அதிகாரிகள் அதிரடி?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம், கோவில்பட்டி நகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை

advertisement by google

கொரோனா (கோவிட்-19) வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும், சமூக பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டும் கொள்ளை நோய் தடுப்புச்சட்டம் -1897 மற்றும் தமிழ்நாடு பொதுசுகாதாரச்சட்டம் -1939ன் படியும், முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

advertisement by google

அதன் பேரில் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் ஆலோசனையின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், காஜாநஜ்முதீன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் கோவில்பட்டி நகர எல்லைக்குள் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர்.

advertisement by google

பார்க்ரோடு, கதிரேசன் கோவில் ரோடு, புதிய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதிகளில், எட்டையபுரம் ரோடு பகுதிகளில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு நகராட்சி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது. சுகாதார அலுவலர் தெரிவிக்கையில் சமூக பரவலை தடுக்கும் பொருட்டும், கொரோனா (கோவிட்-19) வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும் அனைவரும் முககவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button