இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

மத்தியரசு 14 மாநிலங்களுக்கு 2வது தவனையாகநிதி ஒதுக்கீடு?தமிழகத்திற்கு 335 கோடி மட்டுமே?கேரளாவிற்கு1276கோடியா?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

மத்திய அரசு தமிழகம் உள்பட 14 மாநிங்களுக்கு 2வது தவணையாக நிதி ஒதுக்கீடு.. கேரளாவுக்கு மிக அதிகம்.

advertisement by google

டெல்லி : 15 வது நிதி குழு பரிந்துரைத்தபடி, அதிகாரப் பகிர்வு வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 2 வது சமமான மாதத் தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195.08 கோடியை மத்திய அரசு இன்று அளித்துள்ளது. இது கொரோனா நெருக்கடியின் போது மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்கும் என்று நிதி அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

advertisement by google

கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதியுதவியை எதிர்பார்த்து உள்ளன.

advertisement by google

இந்நிலையில் மத்திய அரசு 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களுககு அளிக்க வேண்டிய நிதி பகிர்வில் 2வது மாத தவணையை அளித்துள்ளது. இதன்படி நாட்டிலேயே கேரளாவிற்கு தான் அதிகமாக 1276 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இமாச்சல் பிரதேசத்திற்கு 952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபிற்கு 638 கோடியும், அஸ்ஸாமிற்கு 631 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.

advertisement by google

ஆந்திர மாநிலத்திற்கு 491 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 417 கோடியும், தமிழகத்திற்கு 335 கோடியும், மணிப்பூருக்கு 235 கோடியும் மேகாலயாவிற்கு 40 கோடியும், மிசோரமுக்கு 118 கோடியும் நாகலாந்திற்கு 326 கோடியும், திரிபுராவிற்கு 269 கோடியும், சிக்கிமிற்கு 37 கோடியும் மத்திய அரசு நிதியாக ஒதுக்கி உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இன்று கொரோனா தொற்று அதிகம்.. ஷாக் அளிக்கும் பட்டியல்
மேற்கொண்ட தொகைகளை அந்தந்த மாநில அரசுகளின் கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது இந்த தொகை என்பது 15வது நிதி குழு பரிந்துஐரத்த மே மாததிற்காக தவணை தொகையாகும்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button