இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

இந்தியாவில் முதன்முறையாக ஆந்திராபேருந்துகளில் இருக்கை அமைப்பு மாற்றம்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

இந்தியாவில் முதன் முதலாக ஆந்திரத்திராவில் பேருந்துகளில் இருக்கை அமைப்பு மாற்றம் செய்யப்பட்டது.
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

advertisement by google

நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் இன்னும் ஒரு வாரத்தில் சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட உள்ளது. அதனால் மாநிலப் போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை சமூக இடைவெளியுடன் இயக்கத் தயாராகி வருகிறது. அதன்படி, ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள இருக்கைகளும் அதற்கேற்றார் போல் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

advertisement by google

தொலைதூர விரைவுப் பேருந்துகள் முதல், நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் வரை இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு பக்கம் 3 வரிசை, மற்றொரு பக்கம் 2 வரிசை என இருந்த இருக்கைகள் முன்புறம், பின்புறம், இடையில் என 1 மீட்டர் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இதனால் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், பேருந்துகள் முறையாக கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளும் முகத்திற்கு கவசம் அணிதல், கையில் கையுறை அணிதல், தங்களுக்கு தேவையான போர்வைகள், குடிநீர் உள்ளிட்டவற்றை தாங்களே கொண்டு வருதல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் விரைவு பேருந்துகளின் முன்பதிவும் தொடங்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button