இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

டிக்டாக்கில் அடிமையாக நடிக்கச்சொல்லி7பேர் குடிமப்புடன், இளைஞர் அடித்து கொடூர கொலை?ராணிப்பேட்டையில் பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

7 பேர்.. ஃபுல் மப்பு.. இளைஞரிடம் அடிமையாக நடிக்க சொல்லி அடி.. கொடூர கொலை.. ராணிப்பேட்டையில்.

advertisement by google

ராணிப்பேட்டை: டிக்டாக்கில் அடிமையாக நடிக்க சொல்லி வற்புறுத்தியதால், இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்து கொன்றுள்ளது.. அப்போது 7 பேருமே தண்ணி அடித்திருந்தனர்.. இதையடுத்து அவர்களில் சிலரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவர்களையும் தேடி வருகிறது.. இந்த சம்பவம் ராணிப்பேட்டையை உலுக்கி எடுத்துள்ளது.

advertisement by google

ராணிப்பேட்டை மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ்… இவரது நண்பர் ராபர்ட்.. இவரும் அதே பகுதியை சேர்ந்தவர்தான்.. இவர்கள் அடிக்கடி டிக்டாக் வீடியோ செய்வது வழக்கம்.
அந்த வகையில், ராபர்ட் தன்னுடன் டிக்டாக் செய்ய வருமாறு விக்னேஷை கூப்பிட்டுள்ளார்.. இதற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.. அந்த டிக்டாக்கில் ஒரு அடிமை போல நடிக்க வேண்டும் என்று சொல்லவும்தான் அவர் மறுத்துள்ளார்.. இதுதான் ராபர்ட்க்கும், விக்னேஷ்க்கும் மோதல் வர காரணமாக இருந்தது.
சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு, கைகலப்பு வரை போனது.. போதாக்குறைக்கு டாஸ்மாக் வேறு திறக்கவும் மது அருந்திவிட்டு இரு தரப்புமே மோதி கொண்டனர்.. அது கொஞ்ச நேரத்தில் கோஷ்டி மோதலானது.. பிரச்சனை பெரிதாகவும், விக்னேஷ் தன்னுடைய அண்ணன் விஜய்யிடம் இதை பற்றி சொல்லி உள்ளார். அந்த நேரம் விஜய் டாஸ்மாக்கில் லைனில் நின்று கொண்டிருந்தார்.

advertisement by google

இதை கேட்டு கோபமடைந்த விஜய், ராபர்ட்டை போனில் கூப்பிட்டு ஆபாசமாக மிரட்டியும் கண்டித்தும் உள்ளார்.. ஒரு கட்டத்தில் “தைரியமிருந்தா, நேர்ல வா” என்று ராபர்ட் விஜய்யை கூப்பிட்டார்.. சரக்கை வாங்கி தானும் தன்னுடைய நண்பர்கள் அஜீத்,வருண், உதயா, அக்ரம், ஆகாஷ், ராஜசேகர் ஆகியோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, ராபர்ட் உள்ள இடத்துக்கு கிளம்பி வந்தார்.

advertisement by google

அப்போது வக்கீல் தெரு என்ற தனிமையான பகுதியில் ராபர்ட்டும், அவரது நண்பரான போஸ் இருவரும் கானா பாட்டு கேட்டு கொண்டு உட்கார்ந்திருந்தனர்.. அங்கே வந்த விஜய், ராபர்ட்டை சரமாரியாக தாக்கினார்.. இதை அருகில் இருந்த போஸ் தடுக்க முயன்றார்.. இதனால் மேலும் ஆத்திரமடைந்த விஜய்யும் அவரது நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து போஸை கீழே தள்ளியதோடு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் கண்மூடித்தனமாக கடுமையாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் போஸ் நிலைகுலைந்து விழுந்தார்.. ரொம்ப நேரத்துக்கு உடம்பில் அசைவே இல்லை.. இதை பார்த்ததும் ராபர்ட் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. இதனால் ராபர்ட் பயந்துவிட்டார்.. போஸை தாக்கியதுடன், தானே அவரை பைக்கில் உட்கார் வைத்து கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.. ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
தகவலறிந்து ராணிப்பேட்டை போலீஸார் ஆஸ்பத்திரி விரைந்தனர்.. ஆனால் அதற்குள் விஜய் மற்றும் அவரது நண்பர்களில் சிலர் தப்பிவிட, ராஜசேகர்,வருண் ஆகிய 2 பேரை மட்டும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.. தப்பியோடியவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். ஊரடங்கை தொடர்ந்து மதுக்கடைகள் திறக்கட்ட நிலையில், போதையால் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button