[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி அனைத்து தரப்பினருக்கும் நன்றி – ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது
எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல – பொன் மாணிக்கவேல்
இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை
இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது – பொன் மாணிக்கவேல்
அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும் – பொன் மாணிக்கவேல்
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றிவரும் மருத்துவர் உதயராஜ்(29) விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை.
விருதாச்சலத்தை சேர்ந்த உதயராஜ் மதுரை மதிச்சியம் பகுதியில் அறை எடுத்து வசித்து வந்த நிலையில், நள்ளிரவில் தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை.
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ வங்கிகள் இணைப்பை கண்டித்து வேலைநிறுத்த நோட்டீஸ் :
AIBOC, AIBOA, INBOC, NOBO ஆகிய வங்கி அலுவலர் சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளன
செப்டம்பர் 25ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ சென்னையில் பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடங்கியது
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
இயற்கை பானங்களான இளநீர், மோர் உள்ளிட்டவைகளை மக்கள் பருக வேண்டும்
உணவுதிருவிழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#BREAKING :
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்த சீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவு
உடனடி கைதுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவால் போராட்டங்களும் வன்முறைகளும் ஏற்பட்டதாக மத்திய அரசு மனு தாக்கல்
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#Breaking :
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்
தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அனைத்து அரசியல் கட்சிகளும் நீதிமன்ற உத்தரவை மீறுகின்றன – உயர்நீதிமன்றம் கண்டனம்..
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு.
உச்சநீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் – ஆட்சியர் வீரராகவராவ்
அனுமதிபெறாத பேனர்களை அகற்றவும், விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் குழு அமைப்பு – ஆட்சியர் வீரராகவராவ்
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மெதுவாக உள்ளது – ஐஎம்எப் கருத்து
சில வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நீடிக்கும் பலவீனமும் மந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது – ஐஎம்எப் கருத்து
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪சென்னை பள்ளிக்கரணையில் பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் :
பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்..
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?
விதிகளை மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே?
பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
2.15 மணிக்கு காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் ஆஜராக வேண்டும்
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணத்தில் மாற்றம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ
எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜூ
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் :
ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கே.கே.சி கல்வி நிறுவனத் தலைவருமாகிய கே.கே.சின்னப்பன் Ex MLA அவர்கள் இயற்கை எய்தினார்.
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#BREAKING :
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
கொடிகளை அகற்றி விட்டு பிற்பகலில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
கொடிகளை அகற்றி விட்டு பிற்பகலில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாடு செல்வதாக தகவல்
முதலில் சிங்கப்பூர்செல்லும் ஓ.பி.எஸ். அங்கிருந்து சீனா அல்லது இந்தோனேஷியா செல்லவிருப்பதாகவும் தகவல்
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪சென்னை தீவுத்திடலில் நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி..
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪நீரவ் மோடியின் சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல் அமைப்பு
வெளிநாடு தப்பிச் செல்ல நீரவ் மோடிக்கு உதவியதாக அமலாக்கத்துறை இன்டர்போல் அமைப்பிடம் தெரிவித்திருந்தது
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪அசோக் லேலண்ட் நிறுவனம் எண்ணூர் யூனிட் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் 5 நாட்கள் கட்டாயவிடுப்பு அளித்துள்ளது.
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪புதுச்சேரி காந்திவீதியில் உள்ள பிரபல ஷோரூமில் பலகோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
ரேடோ, டிஸ்காட் உள்ளிட்ட கம்பெனிகளில் விலையுயர்ந்த கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கடை உரிமையாளர் புகார்.
கைரேகை நிபுணர்களின் மூலம் குற்றவாளிகளின் ரேகையை பதிவு செய்ததில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
மர்மநபர்களின் கொள்ளை குறித்து சிசிடிவி கேமரா பதிவினை கொண்டு போலீஸ் தீவிர விசாரணை.
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#Breaking :
தி.மு.க. நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்டவுட்கள் வைக்க கூடாது – தி.மு.க.வினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
அறிவுரையை தி.மு.க.வினர் மீறினால் கடும் நடவடிக்கை – ஸ்டாலின்
பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் – ஸ்டாலின்
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்ததால் ஸ்டாலின் எச்சரிக்கை
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪8-ஆம் வகுப்பு தனித் தேர்வு :
பள்ளியில் படிக்காமல் நேரடியாக 8-ஆம் வகுப்பு தேர்வு எழுதுவோருக்கு ஏப்ரல் 2-ல் தேர்வு நடத்தப்படும் – அரசு தேர்வுத் துறை இயக்குனரகம்
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪சென்னையில் இன்றும் சரிந்த ஆபரண தங்கத்தின் விலை :
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1350 ரூபாய் வரை குறைத்துள்ளது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை :
சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது.
ஒரு சவரன் 28,856 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.3,607க்கு விற்பனையாகிறது.
24 கேரட் அளவிலான தங்கத்தின் விலை :
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,764 ஆகவும்
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,112 ஆகவும் உள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கு விற்பனை
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪கடைமடை பகுதியை கண்டுக்காத அவலம் நன்றி போஸ்டர் ஒட்டிய விவசாயிகள்
தஞ்சை மாவட்டத்தின், கடைமடை பகுதிகளை கண்டுகொள்ளாத பொதுப்பணித் துறை அதிகாரிகள் முதல், எம்.பி., வரை அனைவருக்கு நன்றி தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள், ‘போஸ்டர்’ அடித்து ஒட்டியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவைகள் துார் வாரப்படாததாலும், வரத்து வாய்க்கால்கள் அடைபட்டுக் கிடப்பதாலும், ஏரிகளில், காட்டாமணக்கு, சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன.
ஆக., 13ல், டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கல்லணையில், 17ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஒரு மாதம் ஆகும் சூழலில், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.
இதனால், அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. சில நாட்களாக, கொள்ளிடத்தில் உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலந்து வருவது, விவசாயிகளுக்கு வேதனையை அளித்து உள்ளது.
இந்நிலையில், நேற்று பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில், விவசாயிகள் சார்பில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அவற்றில், ‘கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் கானல் நீர் தானோ. ஏரிகளில் எருக்கஞ்செடி, காடுகள், வரத்து வாய்க்கால்கள் புதர் மண்டிக் கிடக்கும் அவலம்.
‘கடைமடை விவசாயிகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாத பொதுப்பணித் துறை, கலெக்டர், எம்.பி., – எம்.எல்.ஏ., அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
[9/13, 5:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#Breaking :
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும்”
அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவுறுத்தல்
“மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அதிமுகவினர் ஈடுபட கூடாது”
“அறியாமையால் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படுவதால் மனவேதனை அடைகிறோம்”
தலைமையின் அறிவுறுத்தலை கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு