கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டியில் மொத்த மருந்துகடை விநியோஸ்தலர் தற்கொலை? முழுவிவரம் விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் மொத்த மருந்துக்கடை விநியோகஸ்தர் தற்கொலை – போலீசார் விசாரணை

advertisement by google

கோவில்பட்டி பாரதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மரகதலிங்கம் மகன் மகாராஜன்(32). இவர் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கட்டடத்தில் மொத்த மருந்துக்கடை விநியோகஸ்தராக தொழில் நடத்தி வந்தார். இவர் நேற்று இரவு கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது மனைவி செல்போனில் மகாராஜனை தொடர்பு கொண்டபோது பதில் ஏதுமில்லையாம். அதையடுத்து அவரது உறவினர்கள் இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது அவர் கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button