இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

மும்பையில் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவு* *மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் நடவடிக்கை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மதுபான கடை உட்பட.. அத்தியாவசியமற்ற கடைகளை உடனே மூடுங்க.. மும்பை மாநகராட்சி போட்ட பெரிய யூ டர்ன்.

advertisement by google

மும்பை: மும்பையில் அத்தியாவசியமற்ற சேவைகள் வழங்கும் அனைத்து வகையான கடைகளையும் மூடி விடுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.

advertisement by google

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,000ஐ தாண்டி உயர்ந்து விட்டதால், மும்பை மாநகராட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இதுகுறித்து கூறும்போது, காய்கறிகள் மற்றும் மெடிக்கல் கடைகள் ஆகியவை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும். மற்றபடி தனிமையில் உள்ள கடைகள், மதுபானக் கடைகள் உட்பட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
மே 3ஆம் தேதி முதல் மத்திய அரசு சில ஊரடங்கு தளர்வு அறிவித்தது. இந்த தளர்வுகளை ஏற்று, தனிமையில் உள்ள கடைகள், மதுபானக் கடைகள் உள்ளிட்டவற்றை 4ம் தேதி முதல் அனுமதிப்பது என்று மகாராஷ்டிர அரசு முடிவு செய்திருந்தது.

advertisement by google

இந்தியாவிலேயே முதல் மாநிலம்.. மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தெலுங்கானா அரசு அதிரடி
கண்டைன்மெண்ட் பகுதிகளுக்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தாது என்றும் அறிவித்து இருந்தது. தமிழக அரசும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் அறிவித்து உள்ளது. ஆனால் மதுபான கடைகள் தமிழகத்தில் 7ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழகத்தை விட மோசமாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்றுகொண்டிருக்கிறது. அதிலும் மும்பை நகரம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தனது உத்தரவை வாபஸ் பெறும் வகையில் அரசு நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதே போன்று பிற மாநிலங்களும் நடவடிக்கை எடுத்தால் தொழில் நடவடிக்கை முற்றிலும் ஸ்தம்பித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button