இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

?பரபரப்பான விரிவாணசெய்திகள்?

advertisement by google

?? விண்மீண்நியூஸ்??⭕WinmeenNews.com⭕ 9 முறை குட்டப்பட்டி தலைவரான காங்., பிரமுகருக்கு முதல்வர் அஞ்சலி

advertisement by google

மேட்டூர்: குட்டப்பட்டி ஊராட்சி தலைவராக, ஒன்பதுமுறை தேர்வு செய்யப்பட்ட, காங்., பிரமுகர் நாராயணன், உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு, தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.

advertisement by google

சேலம் மாவட்டம், மேச்சேரி, குட்டப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் நாராயணன், 97; காமராஜர் மீது பற்றுகொண்ட அவர், காங்., கட்சியில் இணைந்து, தீவிரமாக செயல்பட்டார். இறுதிவரை, காமராஜரை போன்று, நீண்ட கை சட்டை, கதராடை மட்டும் அணிந்தார். 1956ல், குட்டப்பட்டி ஊராட்சி தலைவரானார். பின், 1967ல், மேச்சேரி ஒன்றிய குழு தலைவராக இருந்தார். தொடர்ந்து, 1977ல், தாரமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். பின், மீண்டும் குட்டப்பட்டி ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தன் ஊராட்சியில், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். அவர், உயிருடன் இருக்கும்வரை, வேறு யாரையும் தலைவராக தேர்வு செய்ய மாட்டோம் என, குட்டப்பட்டி மக்கள் முடிவு செய்தனர். இதனால், ஒன்பது முறை, ஊராட்சி தலைவராக இருந்த நாராயணன், உடல் நலக்குறைவால், நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உடலுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்று அஞ்சலி செலுத்தினார். பல்வேறு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

advertisement by google

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:04 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ காற்றாலை மின் உற்பத்தி சரிவு: தேவை குறைவால் வாரியம் சமாளிப்பு

advertisement by google

மேட்டூர்: காற்றாலை மின்உற்பத்தி சரிந்த நிலையில், தேவையும் குறைந்ததால், மின் வாரியம் சமாளித்தது. தமிழக காற்றாலைகள் மூலம், 8,468 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். நேற்று முன்தினம் இரவு, 3,790 மெகாவாட்டாக இருந்த, காற்றாலை மின்உற்பத்தி, நேற்று காலை, 1,646 மெகாவாட்டாக, திடீரென சரிந்தது. அதேநேரம், மொகரம் பண்டிகையால், அரசு விடுமுறை விடப்பட்டு, அலுவலகங்கள், பள்ளிகளின் மின்பயன்பாடு குறைந்தது. இதனால், நேற்று முன்தினம், 15 ஆயிரத்து, 904 மெகாவாட்டாக இருந்த, தமிழக மின்தேவை, நேற்று, 12 ஆயிரத்து, 899 மெகாவாட்டாக சரிந்தது. காற்றாலை மின் உற்பத்தி சரிந்த நிலையில், நுகர்வும் குறைந்ததால், தேவையை, மின் வாரியம் சமாளித்தது.

advertisement by google

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ சென்னையில் வங்க தேச காவல் ஆய்வாளர் அரிபுல் இஸ்லாம் மீது 3 மர்ம நபர்கள் தாக்குதல்

advertisement by google

சென்னை: சென்னையில் வாங்க தேச காவல் ஆய்வாளர் அரிபுல் இஸ்லாம் மீது 3 மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தன்னை தாக்கியதாக அரிபுல் இஸ்லாம் புகார் அளித்துள்ளார்.

advertisement by google

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ 2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: 2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ தருமபுரி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் ரத்தக்கறை: போலீசார் விசாரணை

தருமபுரி: தருமபுரி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் ரத்தக்கறை காணப்பட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தருமபுரி போலீஸ் ரத்தக் கறையை அகற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

எனக்கு ஒரு பொண்ணு வேணும்.. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா?

பொண்ணு வேணும்னேன்” என்று லாட்ஜ் பெண் ஓனரிடம் அதிமுக முன்னாள் எம்பியின் கணவர் மிரட்டும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கோபிசெட்டிபாளையம் பாஸ்கரன் வீதியை சேர்ந்த தம்பதி சாமுவேல் – நிர்மலா. நிர்மலாவுக்கு 45 வயதாகிறது. இவர் கோபியில் கடந்த 12 வருடங்களாக லாட்ஜ் ஒன்றினை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை நிர்மலா வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு செல்போன் வந்துள்ளது. முன்னாள் திருப்பூர் எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு பேசினார். தான் ரூமில் ஜாலியாக இருக்க பெண் வேண்டும் என கூறி நிர்மலாவை மிரட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவர் பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.வாசு: எப்படி இருக்கீங்க நிர்மலா? எங்க இருக்கீங்க? சென்னையா ? கோபியா? எப்போ பார்த்தாலும் சோக கீதம் பாடிட்டு இருக்கீங்க? சென்னையா? பெங்களூரிலேயா இருக்கீங்க? நிர்மலா: நான் கோபியில் தான் இருக்கேன். நான் எதுக்கு பெங்களூர் போறேன்? வாசு: ஒன்னுல்லை.. உங்ககிட்டே கேட்க கூடாது தான். நானும் நீங்களும் எவ்வளவு பிரெண்டுனு உங்களுக்கே தெரியும். உங்க லாட்ஜ்-ல என்ன நடக்குதுனு உங்களுக்கே தெரியும். எனக்கு ஒரு பொண்ணு வேணும். நிர்மலா: என்ன சொல்றீங்க? என்ன சொல்ல வர்றீங்கனு புரியலை. வாசு: நிர்மலா காட்டேஜ்ல எல்லாமே நடக்குதுல்ல. பொண்ணு வேணும்னேன். நிர்மலா: நீங்க தேவை இல்லாத பேசறமாதிரி இருக்கு. வாசு: உங்களுக்கு தெரியலையா? இல்ல புரியலையா? நிர்மலா: நான் காட்டேஜ்க்கு மாதம் ஒருமுறை போயி அக்கவுண்ட் பார்ப்பேன் அவ்வளவு தான். இப்போ எதுக்கு தேவை இல்லாத பேசறீங்கனு புரியல வாசு: உங்க காமிராவுல பார்த்துட்டு தான் இருக்கீங்க. என்ன நடக்குதுனு உங்களுக்கு தெரியும்.அதை எல்லாம் நான் தப்பு சொல்லலை. எல்லா பக்கமும் அது நடக்கிறது தான். நிர்மலா: தேவை இல்லாம எதுக்கு என்கிட்டே வம்பா பேசறீங்க? வாசு: ஆக்சுவலா உங்க லாட்ஜ்ல இரண்டு வருசத்துக்கு முன்னணி ரூம் போட்டு இருந்தேன். நிர்மலா: எப்போ ரூம் போட்டு இருந்தீங்க? வாசு: சூட்டிங் நடக்கும் போது ரூம் போட்டு இருந்தேன். உளவுத்துறை கூட எதுக்காக அங்க ரூம் போட்டீங்க? என்ன சமாச்சாரம்னு விசாரிக்கறாங்க. நீங்கள் கோவப்பட கூடாது. கோவப்படால் வேலைக்கு ஆகாது. அது நிக்காது.நிர்மலா: கோவப்படக்கூடாதுனு சொன்னால் எப்படி? காலையில் கூப்பிட்டு பொண்ணு வேணும் என கேட்டால் எப்படி? இது நல்லா இருக்கா? வாசு: அதுதான் அங்க நடக்குதுனு சொல்றாங்க. நிர்மலா: 12 வருஷமா லாட்ஜ் நடத்துறேன். போலீசார் கூட தங்கறாங்க. போறாங்க. அவங்க கொண்டே கூட ஐடி கார்டு வாங்கிட்டு தான் ரூம் கொடுக்கறேன். ஒரு நாளைக்கு 3 தடவை போலீசார் செக் பண்றாங்க. வாசு: அது தான் அங்க என்ன நடக்குதுனு கேட்கறாங்க. நிர்மலா: இப்போ தங்கறவங்க கிட்டே கேட்காமல் 2 வருசத்துக்கு முன்னாடி தங்குன உங்க கிட்டே எதுக்கு கேட்கறாங்க? வாசு: என்னிடம் கேட்க மாட்டாங்கனு என்ன இருக்கு? நிர்மலா: இப்போ எதுக்கு தேவை இல்லாம தலையிடறீங்க? கவுரவமா 12 வருசமா நடத்திட்டு இருக்கேன். இப்போ எவன் பேச்சை கேட்டு இந்த மாதிரி பண்றீங்கனு தெரியலை. வாசு: நான் யார் பேச்சையும் கேட்டு பேசலை. நீங்க வெய்ட் பண்ணுங்க. அங்க ஏதாவது தப்பா நடந்தா அடுத்த செகன்டே கேசு ஆயிடும். நிர்மலா: ஆயிட்டு போதுங்க. அப்படி இருந்தா இவ்வளவு போலீசார் இங்க தங்க மாட்டாங்க. என்னமோ தேவை இல்லாமல் தலையிட்டுட்டு இருக்கீங்க. வாசு: நான் தேவை இல்லாமல் தலையிடல. உங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லைனா விட்ருங்க.. பார்த்துக்கலாம் நிர்மலா: உங்களை பார்த்தே 2 வருசமாச்சு. எவன் காசு கொடுத்து இந்த மாதிரி பண்ண சொன்னான்? உங்களுடைய இருக்கும் இவ்வளவு கேவலமா நடந்து இருக்க கூடாது.வாசு: நான் கேவலமா எல்லாம் நடக்கலை. வெய்ட் பண்ணுங்க.இவ்வாறு அவர்களின் உரையாடல் உள்ளது. நிர்மலா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார். எனினும், இந்த உரையாடல் உண்மைதானா, பேசியது சம்பந்தப்பட்ட இருவர்தானா? அல்லது அவப்பெயரை உருவாக்க புனையப்பட்ட ஒன்றா என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை. இதன் உண்மைதன்மையை போலீசார்தான் வெளிக்கொணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ மலைவாழ் கிராமத்தில் அரசுக்கு எதிராக பிரச்சாரம்: மாவோயிஸ்ட் வழக்கு செப்.26-க்கு ஒத்திவைப்பு

உதகை: மலைவாழ் கிராமத்தில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாவோயிஸ்ட் கிருஷ்ணன் என்ற டேனிஸ் மீதான வழக்கு வருகின்ற செப்டம்பர்.26-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ சென்னை நுங்கம்பாக்கத்தில் கார் விற்பனையாளர் வீட்டில் தற்கொலை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் கார் விற்பனையாளர் ரீட்டா (50) என்பவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கார் விற்பனை செய்யும் லான்சன் டொயோட்டா நிறுவனத்தை ரீட்டா சென்னையில் நடத்தி வந்துள்ளார்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ அரக்கோணத்தில் குண்டும் குழியுமான சாலையில் குழந்தைகள் நாற்று நட்டு விளையாடும் வீடியோ வைரல்

அரக்கோணம்: அரக்கோணத்தில் குண்டும் குழியுமான சாலையில் குழந்தைகள் நாற்று நட்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சாலை குண்டும் குழியுமான காட்சியளிப்பதால் குழந்தைகள் நாற்று நட்டு விளையாடி வருகின்றனர். அதை வீடியோ எடுத்து அப்பகுதி மக்கள் விடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ உனாவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன எரிவாயு கிடங்கில் வெடி விபத்து

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் உனாவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன எரிவாயு கிடங்கில் வெட்டி விபத்து நடந்துள்ளது. எரிவாயு சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த வெட்டி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ சுக்ரவார்பேட்டையில் ரோந்து பணியின் போது கிடைத்த துப்பாக்கி குறித்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்காத ஆய்வாளர் பணிமாற்றம்

கோவை: கோவை சுக்ரவார்பேட்டையில் ரோந்து பணியின் போது கிடைத்த துப்பாக்கி குறித்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்காத ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். துருப்பிடித்த நிலையில் இருந்த துப்பாக்கியை கைப்பற்றிய வெரைட்டிஹால் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕தேசிய மனித உரிமை ஆணையம் பொது விசாரணை

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடினர் சமூகத்தினரின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் இன்றும் நாளையும் பொது விசாரணை மேற்கொள்கிறது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ குழந்தை, பெற்றோர் மர்மச்சாவு: ரயில்வே போலீஸ் விசாரணை

சேலம்: தண்டவாளத்தில், குழந்தை, அவரது பெற்றோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, காக்கங்கரை – குன்னத்தூர் இடையே, ராமகிருஷ்ணபதியில், ரயில்வே தண்டவாளத்தில், குழந்தையுடன் மூன்று பேர் இறந்து கிடப்பதாக, சேலம் ரயில்வே போலீசாருக்கு, ஊழியர் தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், உடல்களை மீட்டு, அருகே கிடந்த பையில், அணைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போனை, ‘ஆன்’ செய்தனர். அதன் மூலம் நடத்திய விசாரணையில், இறந்தது, வேலூரைச் சேர்ந்த விஜயன், 29, அவரது மனைவி சுமித்ரா, 28, பிறந்து, 40 நாளேயான, அவர்களது பெண் குழந்தை என்பது தெரிந்தது. அவர்கள், ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனரா, யாரேனும் கொன்றனரா என்ற கோணங்களில், ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் அகில இந்திய பார் அசோசியேஷன் வலியுறுத்தல்..

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருகிறது – காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மத்தியில் சோனியா காந்தி பேச்சு

நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது – சோனியா காந்தி..

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ காவிரிப்படுகையில் ஏராளமான மரங்கள் வெட்டி கடத்தல்: கன்று நட்டு சுற்றுச்சூழலை காக்க மக்கள் எதிர்பார்ப்பு

மேட்டூர்: காவிரிப்படுகையில், ஏராளமான மரங்களை வெட்டி கடத்தப்பட்டதால், மேட்டூர் அணை கரையோர பகுதி, பொட்டல்காடாக மாறி விட்டது. அங்கு, மீண்டும் மரக்கன்று நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காவிரிப்படுகைக்குள் அடங்கியுள்ள, மேட்டூர் அணை, மொத்தம், 138.8 சதுர கி.மீ., 34 ஆயிரத்து, 471 ஏக்கருடையது. சேலம், தர்மபுரி மாவட்ட, அணை நீர்பரப்பு பகுதியில், ஏராளமான ஓடைகள் கலக்கின்றன. மழைக்காலங்களில், சுற்றுப்பகுதியிலுள்ள செம்மண், வெள்ளத்துடன் கலந்து, அணை நீர்பரப்பு பகுதிக்குள் புகும். அப்படி புகுந்தால், அணை நீர்பரப்பு பகுதி மேடாகி, நீர் சேமிப்பின் அளவு குறையும். இதைத்தடுக்க, 35 ஆண்டுக்கு முன், வனத்துறை, சமூக காடு வளர்ப்பு திட்டத்தில், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், கரையோரம், 100 மீட்டர் அகலத்தில், கருவேலம், கருங்காலி, குடவேலம் உள்பட பல்வேறு வகைகளில், ஆயிரக்கணக்கில், மரக்கன்றுகள் நட்டு பராமரித்தன. கரையோரத்திலிருந்து பார்க்கும்போது, அணை நீர்பரப்பு பகுதி, பச்சைப்பசேல் என காட்சியளித்தது.

கடந்த, 1992ல் சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில், சிறப்பு அதிரடிப்படையினர், வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, வனத்துறை ஊழியர்கள், போலீசார், சிலரை வீரப்பன் சுட்டுக்கொன்றார். இதனால், ஊழியர்கள் தனியாக செல்ல வேண்டாம் என, வனத்துறை உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டு காலம், வனத்துறையினர், மேட்டூர் அணை கரையோர கண்காணிப்பு பணிக்கு செல்லவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, அணை கரையோர கிராமங்களைச் சேர்ந்த, திருட்டு கும்பல், ஏராளமான மரங்களை வெட்டி கடத்தியது. அணை கரையோர பகுதி, தற்போது வெட்டவெளியாக மாறிவிட்டது. அரிதாக, சில மரங்கள் மட்டுமே, நீர்பரப்பு பகுதியில் உள்ளன. எதிர்காலத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, அணை கரையோர பகுதியில், மரக்கன்று நட்டு வளர்க்க, அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ பக்தர்களிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, குரும்பப்பட்டி, அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்துவிட்டு, காலை, 11:00 மணிக்கு, கூட்டம் கலைந்து சென்றது. அப்போது, இடைப்பாடி, ஏரிரோடு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மனைவி மலர்கொடி, 60, சேலம், செட்டிச்சாவடியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி கமலவள்ளி, 70, ஆகியோரிடம் முறையே, 2 பவுன், 3 பவுன் தங்க சங்கிலியை, மர்மநபர்கள் பறித்துச்சென்றனர். இதுகுறித்து, பெண்கள் புகார்படி, இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ அக்கறை காட்டுவதாக நடித்து நகையை அமுக்கிய பெண்கள் உள்ளிட்ட மர்ம கும்பலுக்கு வலை

சங்ககிரி: அக்கறை காட்டுவதாக நடித்து, நகையை அமுக்கிய பெண்கள் உள்ளிட்ட மர்ம கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

சங்ககிரி, சந்தைப்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமியின் மனைவி புஷ்பா, 68; இவர், கடந்த ஆக., 11, மாலை, 4:00 மணிக்கு, அங்குள்ள வாரச்சந்தைக்கு காய்கறி வாங்கச்சென்றார். அங்கு, அடையாளம் தெரியாத இரு பெண்கள், புஷ்பாவை பார்த்ததும், ஏற்கனவே பழகியதுபோல் நடித்து, சார்பதிவாளர் அலுவலகம் அருகே அமர்ந்து பேசலாம் எனக்கூறி, அழைத்துச்சென்றனர். அங்கு வந்த ஒருவர், மூவரையும் பார்த்து, மிரட்டல் விடுத்துச்சென்றார். உடனே, அந்த பெண்கள், ‘அவரை பார்த்தால், திருடன்போல், தெரிகிறது. அதனால், நீங்கள் அணிந்திருக்கும் நகையை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்களும் பையில் வைத்துக் கொள்கிறோம்’ என, புஷ்பாவிடம் தெரிவித்தனர். அதை நம்பிய புஷ்பா, 3 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தோட்டை கழற்றி, அவர்கள் வைத்திருந்த பையில் போட்டார். சற்று நேரத்தில், அவர்கள், பையை புஷ்பாவிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்த காரில் ஏறிச்சென்றனர். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பையில் போலி நகை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். நேற்று, லாரிக்கு சென்றுவிட்டு, புஷ்பாவின் மகன் சதீஷ்குமார், 45, வீட்டுக்கு வந்தார். அப்போது, நகை பறிபோனது குறித்து, அவர் தெரிவித்தார். இதையடுத்து, புஷ்பா புகார்படி, சங்ககிரி போலீசார், மர்ம கும்பலை, தேடி வருகின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ மின் ஊழியரை தாக்கிய சமையலருக்கு காப்பு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு, 29; பெங்களூருவில், சமையல் வேலை செய்கிறார். நேற்று முன்தினம், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர், நாகியம்பட்டியிலுள்ள, டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். பின், ‘பஜாஜ் – டிஸ்கவர்’ பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற, அதே பகுதியைச் சேர்ந்த, மின்வாரிய ஊழியர் பெரியசாமி, 57, மீது, பிரபு மோதிவிட்டார். அதுகுறித்து கேட்டபோது, பெரியசாமியை, பிரபு தாக்கினார். இதுகுறித்து அளித்த புகார்படி, தம்மம்பட்டி போலீசார், நேற்று, பிரபுவை கைது செய்தனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ சிறுவன் மீது கல்வீச்சு: குடிமகன் மீது வழக்கு

ஓமலூர்: ஓமலூர், செம்மண்கூடல் அருகே, கந்தம்பிச்சனூரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 28; டிரைவர். இவரது மனைவி மீனாட்சி, 27. இவர்களது மகன் மணிகண்டன், 3, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த, கயிறு திரிக்கும் தொழிலாளி மணிகண்டன், 32. மது அருந்திவிட்டு, விஜயகுமார் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு அமரக்கூடாது என, சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், அவர்கள் மீது கற்களை வீசினார். அப்போது, விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின், மர்ம உறுப்பு மீது, கற்கள் பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகுமார் புகார்படி, தாரமங்கலம் போலீசார், தொழிலாளி மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

⭕winmeenNews.com⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ மாதந்தோறும் குறைதீர் கூட்டம்: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

ஆத்தூர்: ஆத்தூர் கோட்ட அளவில், மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்த, ஆர்.டி.ஓ.,விடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி கருப்பண்ணன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரையிடம், நேற்று முன்தினம் அளித்த மனு: ஆத்தூர் கோட்ட அளவில், மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, அடையாள அட்டை வழங்க, கிராமம்தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட கூலி, நான்கு மணி நேர வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், தேசிய அடையாள அட்டை, 39 பேருக்கும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆணை, ஒன்பது பேருக்கும் வழங்கப்பட்டது.

⭕winmeenNews.com⭕ஊடகதளம்
[9/13, 10:07 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ தலைவாசலில் கால்நடை பூங்கா திட்டப்பணியை ஒரு மாதத்தில் முடித்து அரசாணை வெளியீடு

தலைவாசல்: ”தலைவாசலில், கால்நடை பூங்கா திட்டப் பணியை, ஒரு மாதத்தில் முடித்து, அரசாணை வெளியிடப்படும்,” என, தமிழக முதன்மை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் சண்முகம் தலைமையில், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், கால்நடை துறை செயலாளர் கோபால் ஆகியோர், சேலம் மாவட்டம், தலைவாசலிலுள்ள ஆட்டுப்பண்ணையில், நேற்று, ஆய்வு செய்தனர். அப்போது, சர்வதேச தரத்தில், கால்நடை பூங்கா அமைக்க இடவசதி உள்ளிட்ட தகவல்களை, பல்வேறு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், பண்ணையிலுள்ள கால்நடை, இட பரப்பளவை பார்வையிட்டார்.

இதுகுறித்து, சண்முகம் அளித்த பேட்டி: தலைவாசலில், சர்வதேச தரத்தில், கால்நடை பூங்கா அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அது, 1,000 ஏக்கரில், 1,000 கோடி ரூபாயில் அமையவுள்ளது. இது தொடர்பாக, முதல்வர், அமெரிக்காவிலுள்ள, பபலோ பகுதியிலுள்ள, கால்நடை பூங்காவை பார்வையிட்டார். இங்கு அமையவுள்ள கால்நடை பூங்காவில், நாட்டு இன கால்நடை பகுதி, ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கூடம், விவசாயிகளுக்கு மாதிரி பண்ணை, விரிவாக்க திட்டங்களுக்குரிய இடம் என, நான்காக பிரிக்கப்பட்டுள்ளன. இறைச்சியை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்வதற்கான வசதியும் அடங்கும். கால்நடை பண்ணை, இறைச்சி பதனிடுதல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டும் விவசாயிகளுக்கு, பயிற்சியளிக்க வசதி செய்யப்படும். இதற்கான திட்ட பணி, ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்படும். மொத்த செலவில், 300 முதல், 400 கோடி ரூபாய் வரை, நபார்டு வங்கி கடன் உதவி, மீதமுள்ள தொகை, தமிழக அரசின் மற்ற நலத்திட்டங்களிலிருந்து, பகிர்ந்து செலவு செய்யப்படும். அத்துடன், 50 ஏக்கரில், கால்நடை மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படவுள்ளது. பண்ணைக்குட்டை, குளங்கள் அமைக்கப்பட்டு, நீர் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, சேலம் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, தலைவாசல் அட்மா குழு தலைவர் ராமசாமி, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

⭕winmeenNews.com⭕ஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button