இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கர்ப்பிணி சடலம் வீட்டில் ,கணவரின் பிணம் ஆற்றில் இந்திய தம்பதியின் சோகமுடிவு அமெரிக்காவில் அதிர்ச்சி?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கர்ப்பிணி சடலம் வீட்டில்.. கணவரின் பிணம் ஆற்றில்.. இந்திய தம்பதியின் சோக முடிவு.. அமெரிக்காவில் ஷாக்.

advertisement by google

உடம்பெல்லாம் காயங்கள் இருந்த நிலையில், ஒரு கர்ப்பிணியின் சடலம் வீட்டில் கிடந்தது.. அவரது கணவரின் சடலமோ ஆற்றில் மிதந்தது.. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியினருக்கு ஏற்பட்ட இந்த சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!

advertisement by google

அமெரிக்காவின் நியூஜெர்ஸி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் இந்திய தம்பதி வாழ்ந்து வந்தனர்.. கணவர் பெயர் மன்மோகன் மால், 37 வயதாகிறது.. மனைவி பெயர் கரிமா கோத்தாரி, 35 வயதாகிறது. இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கர்ப்பணி மனைவி அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.. யார் அவரை கொன்றது, என்ன காரணம் என உடனடியாக தெரியவில்லை.. இது சம்பந்தமாக போலீசார் விரைந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர்.. அப்போது கர்ப்பிணி உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன. அந்த சமயத்தில்தான் அவரது கணவர் ஹாட்சன் நதியில் சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் மனைவியை கணவனே கொன்றுவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

advertisement by google

2 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் அந்த பெண் கர்ப்பிணி என்றே தெரியவந்தது… இன்னும் கணவனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை என்று கூறப்படுகிறது. உயிரிழந்த கர்ப்பிணி ஒரு திறமையான சமையல்காரராம்.

advertisement by google

‘நுகாட்’ என்ற இந்திய உணவகத்தை அங்கு வைத்து நடத்தி கொண்டிருந்திருக்கிறார்கள்.. இவர்கள் ஒரு நல்ல ஜோடி, அதிலும் கரிமாவுக்கு நல்ல மனசு, திறமைசாலி, புத்திசாலி, தொழில் பக்தி நிறைந்தவர் என்று வேலை பார்க்கும் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.. எனினும் தம்பதிக்குள் என்ன பிரச்சனை என்று முழுசாக தெரியவில்லை.. இந்த சம்பவம் நியூஜெர்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button