மகாராஷ்ரா முதல்வர் உத்தவ் எச்சரிக்கை?80% நோயாளிகள் அறிகுறி இல்லாமல் நோய்வந்தவர்கள்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
மகாராஷ்டிராவில் 80% நோயாளிகள் அறிகுறி இல்லாதவர்கள்.. அடுத்த 3 மாதம் முக்கியமானது… உத்தவ் வார்னிங்.
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 80 சதவீத நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
நாடு முழுவதும் 26500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட கால்வாசிக்கும் அதிகமான நோயாளிகள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
நாட்டிலேயே அதிக அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொண்டுள்ளது மகாராஷ்டிரா. தற்போது அங்கு 7,628 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் . இதில் 47.6 சதவிகிதம் கொரோனா நோயாளிகள் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளில் 80 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிகவும் முக்கியமானவை. அவசர சூழ்நிலைகள் காரணமாக மருத்துவர்கள் டயாலிசிஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளை தொடர வேண்டும்.
ஏப்ரல் 30 அன்று, தற்போதைய நிலவரத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என அறிவிக்கப்போகிறேன். மக்கள் தங்கள் வீடுகளிலே முடங்கி இருக்க வேண்டும் ஊரடங்கை தவிர கொரோனாவை விரட்ட வேறு வழியில்லை.
மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டம் ஆனது கிருஷ்ணகிரி… ஓசூர் நபருக்கு மறுசோதனையில் நெகட்டிவ்
தற்போதைய நிலையில் கொரோன தொற்று திடீரென சரியாகிவிடாது. நோய் எதிர்ப்பு குறித்தும் எவ்வித ஆதாரப்பூர்வமான தகவலும் இல்லை. இப்படியான சூழலில் நாம் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்துள்ள குழுக்களை மிக கவனமாக வைத்திருக்க வேண்டும். அனைவரும் முககவசங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கூட்டமாக ஒன்று சேரக்கூடாது. வீட்டிலே இருத்தல் வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் உடற்பயிற்சிக்கு உங்கள் நேரத்தை செலவிடலாம். தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின் மருத்துவமனைகளை உடனே அணுக வேண்டும்” என்றார்