இந்தியாஇன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

கோவில்பட்டி அம்மா உணவகத்தில்மே3 வரை இலவச உணவு ,கபச குடிநீர் மற்றும் சொந்த பணத்தில் நிவாண பொருட்கள் வழங்கி அமைச்சர் கடம்பூர் ராஜீ தொடங்கி வைத்தார்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கொரோனா வந்தவுடன் நாங்கள் ஒளிந்து கொண்டோ, தலைமறைவாகவோ இல்லை, மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறோம் – அமைச்சர் கடம்பூர். செ.ராஜூ

advertisement by google

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்கட் பகுதிகளுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு உடல் எதிர்பு சக்தி அதிகரிக்ககூடிய கபசுர குடிநீர் வழங்குவதை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீரினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். நகராட்சி மூலம் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் தினம்தோறும் 2000 பொதுமக்களுக்கு வழங்கபட உள்ளது. மேலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் 70 சுகாதார பணியாளர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தமது சொந்த பணத்தில் இருந்து 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கினார்.

advertisement by google

இதனை தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

advertisement by google

உலக நாடுகளே கொரோனா தொற்று நோய் குறித்து அஞ்சி கொண்டிருக்கிறது. மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சுய ஊரடங்கு உத்தரவினை மே 3ம் தேதி வரை நீடித்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களும் சுகாதார துறை மூலம் மேற்கொள்ளபட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினம்தோறும் தெரிவித்து வருகிறார். இந்தியாவிலே தமிழகத்தில்தான் கொரோனா தொற்று நோயினால் பாதிகப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் 27 நபர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிகப்பட்டார்கள். ஏற்கனவே 8 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். 14 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 நபர்கள் பாளைங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி ஒரு நபர் உயிர் இழந்துள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

advertisement by google

தமிழக அரசின் மூலம் கோவில்பட்டி நகராட்சி பகுதிக்கு அம்மா உணவகத்திற்கு ரூ.6.17 லட்சமும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.31.00 லட்சமும் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. மேலும் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் சுய ஊரடங்கு காலத்தில் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்ககூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.1000ஃ- மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்களை வழங்க உத்தரவிட்டார்கள். மேலும் மே மாதத்திற்கான ரேசன் பொருட்களும் வழங்கபடும் என தெரிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான 19 வகையான பொருட்கள் ரூ.500க்கு விற்பனை செய்யபடுகிறது. இந்த பொருட்களின் விலை சந்தையில் சுமார் ரூ.600ஆக உள்ளது. பொதுமக்களுக்கு சிரமமின்றியும், வீட்டு அருகில் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் நியாய விலை கடைகளில் இந்த 19 வகையான பொருட்கள் சலுகை விலையில் வழங்கபடுகிறது. தொழிலாளர் நல வாரியம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் சுமார் 86 லட்சம் நபர்களுக்கு ரூ.86.50 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது. மேலும் நரிகுறவர்கள் தேவையான காய்கறிகள், அரிசிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது. இன்று எனது சொந்த ஏற்பாட்டில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய பை வழங்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி மூலம் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது. தினசரி 2000திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 21.04.2020 அன்று வரை 1596 நபர்கள் கொரோனா தொற்றுனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 18 நபர்கள் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்கள். 635 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளிவர வேண்டும். நமது மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை. பொதுமக்கள் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.அரசு எடுத்து தொடர் நடவடிக்கை, மருத்துவர்களின் சேவை, பொது மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம்,இந்தியாவிற்கு முன் உதரணமாக தமிழகம் திகழ்கிறது.எதிர்கட்சிகளை போன்று கொரோனா வந்தவுடன் நாங்கள் ஒளிந்து கொண்டோ, தலைமறைவாகவோ இல்லை,மக்களை அன்றாடம் சந்தித்து கொண்டு இருக்கிறோம்.கொரோனா பற்றிய தகவல்களை சொல்லவதால் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டும் செல்லும் கடமையில் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர்.செய்தியாளர்களை சந்தித்து பேசுவதை அரசியலாக பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.கொரோனா சிகிச்சை அளிக்கும் வசதிகள் அத்துணை தனியார் மருத்துவமனையிலும் இல்லை.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பரவல் ஏற்பட்டு விடாக்கூடாது என்பதற்காக தான் சிகிச்சை அளிக்க கூடாது என்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மற்ற வகைளுக்கு வழக்கம் போல பணிகள் மேற்கொள்ள தடையில்லை.திமுக தலைவருக்கு ஏதாவது குறை சொல்ல வேண்டும்,அம்மா உணவகம் தானாக இயங்கி வருகிறது. விலையில்லமால் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு நிர்வாகத்தில் நாங்கள் இருக்கும் போது செய்ய வேண்டிய பணிகளை நிர்வாகத்தின் மூலமாக செய்து தான் ஆக வேண்டும்.நிர்வாகத்தில் இல்லை என்ற ஏக்கத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த ஏக்கத்தினால் அவருக்கு காய்ச்சல் வரமால் இருந்தால் சரி என்றார்.

advertisement by google

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் தராஜாராம், நிர்வாக பொறியாளர் கோவிந்தராஜன், கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிபாளர் மருத்துவர் கமலவாசன், உறைவிட மருத்துவர் புவனேஸ்வரி, மருத்துவர் மோசஸ்பால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்.ராமசந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், த.மா.க நகர தலைவர் ராஜகோபால், மூர்த்தி, கோவில்பட்டி பால்நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் ராமசந்திரன் என்ற தாமோதரன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் சுப்புராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button