அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற தடைவிதித்திருப்பது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்?ஏன் எதற்கு?முழுவிபர கட்டுரை – விண்மீன்நியூஸ்
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறவும், குடியுரிமை பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக தடை விதித்து இருப்பது அவருக்கே பெரிய அளவில் பிரச்சனையாக முடியும் என்கிறார்கள்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து உள்ளது.
இப்போதைக்கு அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.
அங்கு கொரோனா காரணமாக 819,164 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 45306 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறவும், குடியுரிமை பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்
டிரம்ப் திடீர் முடிவு.. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர் அடுத்த 60 நாட்கள் குடியுரிமை பெற தடைமிக மோசம்அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த உத்தரவால் தற்காலிகமாக அமெரிக்காவில் யாரும் குடியேற முடியாது.
அதேபோல் அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று அடுத்த 60 நாட்களுக்கு யாரும் குடியுரிமை பெறவும் முடியாது. டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்கா செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இது அமெரிக்காவில் குடியுரிமை பெற காத்திருக்கும் பல லட்சம் இந்தியர்களை மோசமாக பாதிக்கும்.செய்ய காரணம் என்ன
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக தாற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். இதனால் அமெரிக்காவில் அமெரிக்கர்களின் வேலையை காக்கும் விதமாக, அங்கு வெளிநாட்டு மக்கள் குடியேற தடை விதித்துள்ளார்
அதாவது இந்த உத்தரவு மூலம் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மக்கள் தனக்கு வரும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பார்கள். அமெரிக்கர்களின் மனதை இதன் மூலம் கவரலாம், தேர்தலில் வெல்லலாம் என்று டிரம்ப் நினைக்கிறார்.ஆனால் உண்மை இதுதான்
ஆனால் டிரம்பின் இந்த முடிவு அவருக்கே பெரிய பிரச்சனையாக முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலாவது விஷயம் அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த முடிவு காரணமாக அமெரிக்காவில் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பெற்று இருக்கும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்
உதாரணமாக அமெரிக்காவில் குடியேறி உள்ள இந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள், சீனர்கள் இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.உண்மையான வாக்கு சதவிகிதம்இவர்கள் அமெரிக்காவின் வாக்கு சதவிகிதத்தில் கணிசமான அளவில் இருக்கிறார்கள். திடீர் என்று குடியுரிமை வேறு நாட்டினர் குடியேற தடை என்று இரண்டு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதால் இவர்கள் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள். இவர்களின் உறவினர்கள் அமெரிக்கா செல்ல முடியாது. இவர்களின் உறவினர்கள் அங்கு குடியேற முடியாது. இதனால் வரும் நாட்களில் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பெரிய சிக்கல் வரும்ஏற்கனவே கிரீன் கார்டிற்கு தாக்கல் செய்துவிட்டு காத்திருக்கும் நபர்களுக்கும் அது கிடைக்க பல மாதங்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எப்படி அதிபர் டிரம்பை பாதிக்கும் என்றால், அமெரிக்க அதிபர் தேர்தலில் இது அவருக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்கா வாழ் மக்களை விட, இந்திய அமெரிக்கர்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்கள், லத்தீன் – அமெரிக்கர்கள் என்று வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்
தேர்தல் முடிவுகள் மாறும்இவர்கள் எல்லோரும் சேர்ந்து நினைத்தால் தேர்தல் முடிவுகளை அடியோடு மாற்ற முடியும். முக்கியமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்தான் அதிக அளவில் இந்தியர்கள் உட்பட இப்படி வெளிநாட்டு மக்கள் இருக்கிறார்கள். டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு நபர் தோல்வி அடைந்தால் அவரால் அதிபர் தேர்தலில் வெல்வது மிக கடினம். ஏனென்றால் டெக்சாஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம்.வெளிநாட்டு மக்கள் குடியுரிமைஅங்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெற்று வசிக்கிறார்கள். டெக்சாஸ் மாகாணத்தில் இந்த புதிய விதி காரணமாக அதிபர் டிரம்ப் தனது மதிப்பை இழக்க வாய்ப்புள்ளது.
அங்கிருக்கும் வெளிநாட்டு மக்கள் அதிபர் டிரம்ப் மீது கோபத்தில் இருப்பதால் இது அப்படியே தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து குடியுரிமை பெற்றவர்களின் வாக்குகளை டிரம்ப் மொத்தமாக இழக்க வாய்ப்புள்ளது.டெக்ஸாஸ் நிலைடெக்ஸாஸ் மாகாணத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து குடியுரிமை பெற்றவர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உதவியுடன் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை நடத்தினார்கள்
ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெயரை எல்லாம் டிரம்ப் கெடுத்துக் கொண்டு இருக்கிறார். இங்கு இந்தியர்கள் அதிகமாக உள்ளனர்.
மோடி திட்டம்பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்காக பெரிய அளவில் டெக்சாஸில் இந்தியர்களை திரட்டினார். டிரம்பிற்கு ஒரு தேர்தல் பிரச்சார மேடை போல இதை அமைத்துக் கொடுத்தார். தற்போது மோடி கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது . ஒரு பக்கம் இப்படி வெளிநாட்டில் இருந்து வந்து குடியுரிமை பெற்றவர்களின் வாக்குகளை இழக்க போகும் நிலையில், டிரம்ப் இன்னொரு பக்கம் கொரோனாவிற்கு எதிரான தோல்வி காரணமாக அதிபர் தேர்தலில் தோல்வி அடையும் நிலைக்கும் சென்றுள்ளார்.தேர்தல் கருத்து கணிப்புகள்இப்போதே கருத்து கணிப்புகள் அவருக்கு எதிராக வர தொடங்கி உள்ளது.
கொரோனாவை அதிபர் டிரம்ப் சரியாக எதிர்கொள்ளவில்லை என்று புகார் உள்ளது. இதனால் இந்த வருடம் இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். பெரும்பாலும் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் தேர்தலில் அதிகம் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.