இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

திருச்சியில்கொரோனா நோயிலிருந்து மீண்ட Dr ஷேக் பேட்டி? துரிதமாக குணமாக இதை செய்யுங்க?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

கொரோனாவிலிருந்து துரிதமாக குணம் அடைய இதை செய்யுங்க.. நோயில் இருந்து மீண்ட டாக்டர் ஷேக் பேட்டி.

advertisement by google

திருச்சி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைதல் என்பது இருட்டுக் குகையின் முடிவில் தெரியும் நம்பிக்கை ஒளி என்ற கொரோனா வைரஸ் நோய் இருந்து விடுப்பட்டு வந்த அய்மான் மகளிர் கல்லூரி இயக்குநர் டாக்டர் ஷேக் முஹம்மது தெரிவித்தார்.

advertisement by google

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முப்பத்து இரண்டு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்து ஏப்ரல் 16-ம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். முறையான கவனிப்பு மூலம், இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை ஓரளவுக்கு ஏற்பட்டுள்ளது.
கொடிய கொரோனா ரைவஸ் தொற்று உலகத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுப்பதில் நாம் ஒன்றுபட்டு போராடி வருகிறோம். மத்திய அரசின் ஊரடங்கு அறிவிப்பு, தொற்று அறிகுறியுள்ளவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவை கொரோனோ பரவுவதை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சிரத்தையான கவனிப்பு காரணமாக கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வருவதை அறிந்து பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

advertisement by google

ஏப்ரல் 1ல் அனுமதி
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று குணம் அடைந்த , திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தற்போது அய்மான் மகளிர் கல்லூரி முதுகலை துறை இயக்குநர் டாக்டர். ஷேக் முகமது கூறுகையில், “டெல்லியில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மார்ச் 19-ம் தேதி சென்றேன். அந்தப் பயணத்தைக் சுருக்கிக் கொண்டு மார்ச் 24-ம் தேதி சென்னை திரும்பினேன். விமான நிலையத்தில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், எனக்கு நோய் பாதிப்பு இல்லை . இருப்பினும் அரசின் அறிவுரைப்படி, சுய தனிமைப்படுத்துதலில் தொடர்ந்து இருந்தேன். மாநில அரசின் யோசனைப்படி, ஏப்ரல் 1-ம்தேதி அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

advertisement by google

என்னென்ன அறிகுறிகள்
மாநாட்டில் கலந்து கொண்ட 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், நான் உள்பட 35 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்தச் செய்தியை அறிந்ததும் நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் தனிப்பட்ட முறையில் மிகுந்த சிரத்தையுடன் தம்மைக் கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி.
தலைவலி, இருமல், அடிவயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தது. தவறாமல் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

advertisement by google

மருத்துவர்களுக்கு பாராட்டு
உரிய கவனம் செலுத்தி, தீவிரக் கண்காணிப்புடன் மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளைக் கவனித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் சிவராசு தனிப்பட்ட முறையில் நோயாளிகளின் நலன் பற்றி விசாரித்து அறிந்து வருகிறார். மாவட்ட, நிர்வாகம் அதிகபட்ச கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

advertisement by google

சத்தான உணவு
இட்லி, சாதம், பருப்பு, பால், முட்டை, ஆரஞ்சுப் பழம், வாழைப்பழம் உள்ளிட்ட மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக. தனக்கு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து என்னையும் (டாக்டர் ஷேக்) உள்பட குணமடைந்த 32 பேரையும் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.வனிதா மற்றும் இதர மருத்துவக் குழு உறுப்பினர்கள் அன்பான முறையில் வழியனுப்பி வைத்தனர்.

advertisement by google

முக்கியமான காரணிகள்
மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, தியானம், தொழுகை, ஆன்லைன் செய்திகளை வாசித்தல், பழைய நண்பர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடல் என அதனை டாக்டர் ஷேக் சிறந்த முறையில் பயன்படுத்தினேன். பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்தல், மருத்துவமனை அதிகாரிகள் கூறுவதை விடாமுயற்சியுடன் பின்பற்றுதல் ஆகியவை துரிதமாகக் குணமடைவதற்கும், கொடிய கொரோனாநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் முக்கியமான காரணிகள் .

நம்பிகை அளித்தார்கள்
நோயாளிகளின் உறவினர்களையும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, சில வருந்தக்கூடிய நிகழ்வுகள் ஏற்பட்டன. முறையான சோதனை மற்றும் மருத்துவமனை சிகிச்சை மூலமே கொரோனாதொற்றைக் கட்டுப்படுத்தலாம் என விளக்கிக் கூறி ஒவ்வொருவரையும் ஆறுதல்படுத்தி, வெற்றிகரமாக நம்பிக்கையூட்டினார்கள்” இவ்வாறு டாக்டர் ஷேக் கூறினார்.

advertisement by google

Related Articles

Back to top button