இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கோவில்பட்டியில் கொரனாவினால், சமூக ஆர்வலர் ஒருவர் இறந்ததாக பொய் செய்தி பரப்பிய கும்பல்?-போலீசார் விசாரணை

advertisement by google

கோவில்பட்டியில் கொரோனாவினால் சமூக ஆர்வலர் ஒருவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பிய கும்பல் – போலீசார் விசாரணை

advertisement by google

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் ஐந்தாவது தூண் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் கோவில்பட்டி நகரில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புக்கள் அகற்றம், பல்வேறு முறைகேடுகள் உள்ளிட்ட சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது மட்டுமின்றி பல்வேறு நூதன போராட்டங்களையும் கோவில்பட்டி நகரில் நடத்தும் வழக்கம். கோவில்பட்டி நகர மக்கள் நன்கறிந்த சமூக ஆர்வலராக உள்ளவரை ஒரு கும்பல் கொரோனா தொற்றால் உயிர் இழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பி தெறிக்கவிட்டனர். இதனைப் பார்த்த பலரும் அவரை தொடர்பு கொண்டு விசாரித்து மட்டுமின்றி, சில நேரில் வர தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் சங்கரலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க துணைத் தலைவர் தமிழரசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், முருகன் ஆகியோர் இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தான் இறந்து விட்டதாக சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்ட செய்தியால் தான் மிகுந்த மனவேதனை அடைந்த உள்ளதாக சமூக ஆர்வலர் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி நகர மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு சமூக ஆர்வலரை வேண்டாத ஒரு கும்பல் கொரோனாவினால் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய பொய்யான செய்தி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சமூக விரோதிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button