சுகர் பேசன்ட் என்றால் யார் ?எதனால்? மருத்துவ விபரம்?கேள்விக்கு பதில் – விண்மீன் நியூஸ்


ஏப்ரல் 15, 1923 – வரலாற்றில் இன்று – ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் விற்பனைக்கு வந்தது.
உடலில் உள்ள திசுக்களின் தேவை யான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப் படுகிறது.. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவ தில்லை. இதனால் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதுவே நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது
நீரிழிவைக் கட்டுப்படுத்த மாத்திரை, இன்சுலின் ஊசி மருந்துகள் உதவுகின்றன. இவற்றில் இன்சுலின் மருந்து மனித உடலில் சுரக்கிற இன்சுலினைப் போலவே வேலை செய்வதால், இதுவே நீரிழிவு நோய்க்கு அற்புத மருந்து என்கிறது ஆங்கில மருத்துவம். இருபதாம் நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பு இன்சுலின் மருந்து