இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்

இந்தியாவில்353 மாவட்டங்களில் கொரோனா இல்லை? சிவப்பு,வெள்ளை, பச்சை என3 மன்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா?- விண்மீன் நியூஸ்

advertisement by google

சிவப்பு, வெள்ளை, பச்சை.. 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா.. 353 மாவட்டங்களில் கொரோனா இல்லை.

advertisement by google

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு, நாடு முழுக்க உள்ள மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்த நிலையில், அதற்கான அறிவிப்பு இரவில் வெளியானது.

advertisement by google

டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் அப்போது கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள், பசுமை மண்டல மாவட்டங்கள், என்று இவை வகைப்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகள், ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்ற பட்டியலின் கீழ் வரும்.
கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் கூட, அது கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய பகுதிகள் ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள் என்ற பிரிவின்கீழ் வரும். சுத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகள் பசுமை மண்டலங்கள் என்ற பிரிவின்கீழ் வரும்.
இதுதொடர்பாக, அமைச்சரவை செயலாளர் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள்,
சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பி, மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் கிடைக்கப்பெற்ற தரவுகளை வைத்து மாவட்டங்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து அரசு இன்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது:

advertisement by google

மத்திய அரசு நாட்டில் 170 மாவட்டங்களை கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் கண்டு அவற்றை சிவப்பு மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தியுள்ளது, இது கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க கடுமையான லாக்டவுன் நடவடிக்கைளின் கீழ் தொடர்ந்து இருக்கும்.
ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு உள்ளது (37 மாவட்டங்களில் 22) மகாராஷ்டிராவில் 14, உத்தரபிரதேசத்தில் 13, ராஜஸ்தானில் 12, ஆந்திராவில் 11 மற்றும் டெல்லியில் 10 உள்ளன.
600 க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொண்ட தெலுங்கானா மாநிலம் 9 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடகா தலா 8 ஹாட்ஸ்பாட்டுகளை கொண்டுள்ளன. கேரளா 7, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா தலா ஆறு. அஸ்ஸாம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஐந்து மாவட்டங்கள் உள்ளன, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா நான்கு மாவட்டங்கள் உள்ளன.

advertisement by google

சிவப்பு மண்டல மாவட்டங்கள் பெரிய பரவல் அல்லது கொத்து பரவல் உள்ள பகுதிகளாக மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பெரிய பரவல் கொண்ட மாவட்டம் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆனால் கிளஸ்டர் பரவல் உள்ள மாவட்டம் மற்ற பகுதிகளை விட கடுமையான கட்டுப்பாட்டை கொண்டிருக்கும்.
வெள்ளை மற்றும் பச்சை மண்டலங்கள்: 207 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் அல்லாத மாவட்டங்களாக அரசு அடையாளம் கண்டுள்ளது, அவை வெள்ளை மண்டலத்தின் கீழ் வருகிறது.
பசுமை மண்டலத்தின் கீழ் எந்த தொற்றும் இல்லாத மாவட்டங்கள் வருகின்றன. இந்தியாவில் இதுபோல கொரோனா நோயால் பாதிக்கப்படாத 353 மாவட்டங்கள் உள்ளன. பசுமை மண்டலத்தின் கீழ் உள்ள 353 மாவட்டங்களில் ஏப்ரல் 20திற்கு பிறகு லாக்டவுன் தளர்வு இருக்கும்.
ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு லாக்டவுன் நடைமுறையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்தது. இதற்கு வசதியாக எவையெல்லாம் பிரச்சனை இல்லாத இடங்கள் என்று வகைப்படுத்தி அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியா கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதும், ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் தொழில் வளர்ச்சி மீண்டும் துவங்கும் என்பதும் இதில் உள்ள நல்ல செய்தி ஆகும்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button