இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கொரனா வைரஸ், புலி, சிங்கங்களுக்கு தொற்று? அமெரிக்க உயிரியல் பூங்காவில் அபாயம்?

advertisement by google

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலி… சிங்கங்களுக்கு அறிகுறி! மனிதர்களை தொடர்ந்து பரவும் அபாயம்

advertisement by google

அமெரிக்காவில் புலி ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளிடமும் பரவி வருவது தெரியவந்துள்ளது.

advertisement by google

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனாவால் தற்போது வரை 1,258,091 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 68,287 பேர் உயிர்ழந்துள்ளனர்.

advertisement by google

மனிதர்களை மட்டுமே அச்சுறுத்தி வந்த இந்த கொடிய நோய் இப்போது விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

advertisement by google

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் Bronx மிருககாட்சி சாலையில் இருக்கும் புலி ஒன்றிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பெரிதாக இருக்கும் மிருககாட்சி சாலைகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

advertisement by google

இது குறித்து Wildlife Conservation Society (வனவிலங்கு பாதுகாப்பு சங்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், Nadia என்ற நான்கு வயது பெண் சிங்கம் ஒன்று மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. ஏனெனில் குறித்த புலியானது உலர்ந்த இருமல் மற்றும் பசியின்மையால் சாப்பிடாமல் இருந்தது.

advertisement by google

அதன் முடிவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் சகோதரியான Azul என்ற புலியும் இரண்டு அமுர் புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

advertisement by google

இதில் Nadia உட்பட அனைத்து விலங்குகளும் குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், மிருகக்காட்சிசாலையில்(பூங்காவில்) பணிபுரியும் ஒருவரால் இந்த விலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் புலி ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மிருககாட்சி சாலை கடந்த மாதம் 16-ஆம் திகதி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

Related Articles

Back to top button